இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021…! IIITDM Recruitment 2021..!

Kanchipuram Jobs 2021

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021…! Kanchipuram Jobs 2021..!

Kanchipuram Jobs: இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Executive Engineer, Junior Engineer, Junior Superintendent, Junior Assistant & Junior Technician பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு விருப்பம் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 30.03.2021 அன்றுக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். IIITDM வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் written test, Trade test/ Computer proficiency test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

IIITDM Jobs 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (Indian Institute of Information Technology Design and Manufacturing)
விளம்பர எண்IIITDM/R/01/2021
பணிகள்Assistant Executive Engineer, Junior Engineer, Junior Superintendent, Junior Assistant & Junior Technician
மொத்த காலியிடம்18
பணியிடம்காஞ்சிபுரம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி30.03.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.iiitdm.ac.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கல்வி தகுதி: 

 • BE/ B.Tech/ Degree/ Diploma/ B.Sc (Physics) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • Assistant Executive Engineer பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Junior Engineer & Junior Superintendent பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Junior Assistant & Junior Technician பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Written test, Trade test/ Computer proficiency test.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ PwD/ Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • SBI collect online portal

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. iiitdm.ac.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Advertisement for Recruitment of Non-Teaching Posts Advt. No. IIITDM/R/01/2021” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
APPLY LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION CLICK HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை (IIITDM Recruitment 2021) படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy 

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Kanchipuram Jobs 2021

Kanchipuram Jobs 2021:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பு 2021 அறிவிப்புப்படி சமூக நலத் துறையின் கீழ் காஞ்சிப்புரம் மாவட்டத்தில் மஹிலா சக்தி கேந்திரா (Mahila Shakti Kendra) திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் (District Level Centre for Women) காலியாக உள்ள மூன்று District Coordinator பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதி பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் 05.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள ஒரு மைய நிர்வாகி பணியிடத்தை நிரப்பிட தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம்  வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் 05.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மேல் கூறப்பட்டுள்ள இரண்டு பணிகளுக்கு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள kancheepuram.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

Kanchipuram Jobs 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் சமூக நல துறை 
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள்District Coordinator & மைய நிர்வாகி
மொத்த காலியிடம்04
பணியிடம்காஞ்சிபுரம்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்29/01/2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 05/02/2021
அதிகாரப்பூர்வ இணையதளம்  kancheepuram.nic.in

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:

பணிகள்காலியிடம் எண்ணிக்கைசம்பளம் 
மைய நிர்வாகி பணிக்கு:01ரூ.30,000/-
District Coordinator பணிக்கு:03ரூ.20,000/-
மொத்த காலியிடம்04

கல்வி தகுதி:

 • மைய நிர்வாகி பணிக்கு: Degree in Law/ Master of Social Work படித்திருக்க வேண்டும். முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • District Coordinator பணிக்கு: Graduate in Humanities & Social Science/ Social Work படித்திருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்ப முறை:-

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர், நெ.43, காந்தி நகர் 2-வது தெரு, (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில்) காஞ்சிபுரம் 631501.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. kancheepuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 3. பின் Centre Administrator for One Stop Centre at DSWO , Kancheepuram & District Coordinator for District Level Centre for Women at DSWO, Kancheepuram ஆகிய அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
 4. இப்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
 6. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM
LINK 1 | LINK 2
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கே கிளிக் செய்யவும்

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil