சமூகப்பாதுகாப்பு துறையில் வேலை 2021 | Namakkal Jobs 2021

Namakkal Jobs 2021

சமூகப்பாதுகாப்பு துறையில் வேலை 2021 | Namakkal Jobs 2021

Namakkal Jobs 2021:- தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறை குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் ஆகிய இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் 20.02.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் சமூகப்பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள https://namakkal.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – Namakkal District Jobs 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்சமூகப்பாதுகாப்பு துறை
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 – TN Velaivaaippu Seithigal 2021
பணிஆற்றுப்படுத்துநர் & கணக்காளர் 
மொத்த காலியிடம்02
சம்பளம்ஒப்பந்த ஊதியம் 1 மாதத்திற்கு ரூ.14,000/-
பணியிடம் நாமக்கல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 09/02/2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 20/02/2021
அதிகாரப்பூர்வ இணையதளம்https://namakkal.nic.in/

கல்வி தகுதி:-

 • ஆற்றுப்படுத்துநர் பணிக்கு உளவியல் (psychology) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஆற்றுப்படுத்துதல் தொழில் (குறிப்பாக குழந்தைகளுக்கு) 2 வருடம் முன்னனுபவம் பெருக்க வேண்டும்.
 • கணக்காளர் பணிக்கு B.Com/ M.Com/ PG பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் கணக்காளராக 2 வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 40 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் அலகு, 78/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனுர் ரோடு, நாமக்கல்-637001

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://namakkal.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
 2. இணையதளத்தின் முகப்பு பகுதியில் NOTICES என்பதில் Recruitment என்று இருக்கும் அவற்றில் NOTIFICATION FOR RECRUITMENT OF CANDIDATES FOR 2 POSTS VACANCY IN NAMAKKAL DISTRICT CHILD PROTECTION UNIT அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும்.
 5. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெறஇங்கே கிளிக் செய்யவும்

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள சமூகப்பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

நாமக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு 2020..! Namakkal Jobs 2020..!

Namakkal Jobs 2020: நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடத்தை நிரப்ப தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தமாக 43 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்ப படிவங்களை கடைசி தேதி (07.01.2021) அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கவும்.

மேலும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைத்துள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்
மொத்த காலியிடம்43
பணியிடம்நாமக்கல்
மாத சம்பளம்ரூ.35,400/- 1,12,400/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி05.11.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி07.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்namakkal.nic.in

கல்வி தகுதி: 

 • நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Diplomo In Civil Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள Notificationஐ கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • எழுத்து தேர்வு மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்று:

 • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சாதி சான்று, முன்னுரிமை இவற்றிற்கான ஆதாரங்களை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம் மூன்றாம் தளம், நாமக்கல் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் (8/12/2020 – செவ்வாய் கிழமை) பிற்பகல் 5:45 மணிக்குள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. namakkal.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitmentஐ க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் NOTIFICATION FOR RECRUITMENT OF CANDIDATES FOR 43 OVERSEERS POSTS VACANCY IN NAMAKKAL DISTRICT RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ UNIT என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 6. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 07.01.2021 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாமக்கல் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Namakkal Jobs 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Employment News Tamil 2021