NLC Recruitment 2024 | NLC வேலைவாய்ப்பு 2024
NLC Recruitment: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (Neyveli Lignite Corporation Limited) ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Apprentice Training (Graduate மற்றும் Technician) பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 588 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 03.01.2025 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நெய்வேலி முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.nlcindia.in என்ற இணையதளத்தை அணுகவும்.
NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் |
NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) |
பணியின் பெயர் |
Apprentice Training (Graduate மற்றும் Technician) Posts |
காலியிடங்களின் எண்ணிக்கை |
588 |
பணியிடம் |
நெய்வேலி |
விண்ணப்பிக்க முதல் தேதி |
09.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
03.01.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் |
www.nlcindia.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
Graduate Apprentice Training:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Mechanical Engineering |
84 |
Electrical Engineering |
81 |
Civil Engineering |
26 |
Instrumentation Engineering |
12 |
Chemical Engineering |
10 |
Mining Engineering |
49 |
Computer Science Engineering |
45 |
Electronics & Communication Engineering |
04 |
Nursing |
25 |
மொத்தம் |
588 |
Technician Apprentice Training:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Mechanical Engineering |
77 |
Electrical Engineering |
73 |
Civil Engineering |
19 |
Instrumentation Engineering |
07 |
Mining Engineering |
30 |
Computer Science Engineering |
18 |
Electronics & Communication Engineering |
08 |
Nursing |
20 |
மொத்தம் |
588 |
கல்வி தகுதி:
- Graduate Apprentice Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree / B.sc Nursing படித்திருக்க வேண்டும்.
- Technician Apprentice Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Diploma /Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.
- 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
சம்பள விவரங்கள்:
- Graduate Apprentice Training பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,028/- மற்றும் Nursing பணிகளுக்கு ரூ.12,524/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Technician Apprentice Training பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,524/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- NLC வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
NLC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NLC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!