சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு | Ranipet District Jobs 2021

Ranipet District Jobs

ராணிப்பேட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு | Ranipet District Velaivaippu

Ranipet District Jobs: சமூகப்பாதுகாப்பு துறையின் (Social Welfare Department) கீழ் இயங்கும் அரசினர் வரவேற்பு இல்லத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய ராணிப்பேட்டை மாவட்டம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது தொழில்நுட்ப அலுவலர் (Technical Officer) & தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.07.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும். 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும். இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்சமூகப்பாதுகாப்பு துறை (Social Welfare Department)
பணிகள்தொழில்நுட்ப அலுவலர் (Technical Officer) & தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
மொத்த காலியிடம்02
பணியிடம்ராணிப்பேட்டை 
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்ranipet.nic.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடம் மாத சம்பளம் 
தொழில்நுட்ப அலுவலர் (Technical Officer)01ரூ. 20,000/-
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)01ரூ. 10,000/-
மொத்த காலியிடம்            02

கல்வி தகுதி:

  • Bachelor Degree / Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில் 
வேலூர் – 632001 வேலூர் மாவட்டம் 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. ranipet.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Notices என்பதில் Recruitment-ஐ கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் Recruitment for Social Welfare Department என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ranipet.nic.in என்ற இராணிப்பேட்டை மாவட்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொண்டு உரிய விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 27.07.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சமூகப்பாதுகாப்பு துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil