ரயில்வே பாதுகாப்பு படையில் 798 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

RPF வேலைவாய்ப்பு

RPF வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

இந்தியன் ரயில்வே துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 798 காலியிடங்களை Constable, Tailor & Cobbler பதவிகளுக்கு நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.  இரயில்வேயில் பாதுகாப்புப் பணிகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். RPF வேலைவாய்ப்பு (RPF recruitment) பற்றிய அறிவிப்புகள் pdf, அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பெறமுடியும். இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 30.01.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET), Physical Measurement Test (PMT), Trade Test and Document Verification என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் RPF / RPSF மையங்களில் ஆரம்ப பயிற்சி மேற்கொள்ளவேண்டும். RPF வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

இவற்றில் RPF வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

RPF வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்:ரயில்வே பாதுகாப்பு படை
வேலை வாய்ப்பின் வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணிகள்:Constable, Tailor & Cobbler
மொத்த காலியிடங்கள்: 798
பணியிடங்கள்:  இந்தியா எங்கும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2019

RPF வேலைவாய்ப்பு (RPF Recruitment) காலியிடங்கள் விவரங்கள்:

 • Constable (Water carrier) பதவிக்கு 452 காலியிடங்கள், Constable (Safaiwala) பதவிக்கு 199 காலியிடங்கள், Constable (Washer-man) பதவிகளுக்கு 49 காலியிடங்கள், Constable (Barber) பதவிகளுக்கு 49 காலியிடங்கள், Constable (Mali) பதவிகளுக்கு 07 காலியிடங்கள், Tailor Gr. III பதவிகளுக்கு 20 காலியிடங்கள், Cobbler Gr. III பதவிகளுக்கு 22 காலியிடங்கள் என்று மொத்தம் 798 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

RPF ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்?

 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி தகுதியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

 • Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET), Physical Measurement Test (PMT), Trade Test and Document Verification என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் முறை மட்டுமே இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
 • மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

RPF வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. rpfonlinereg.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்போதைய RPF வேலைவாய்ப்பு (RPF recruitment) பற்றிய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து  RPF வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.
 4. பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE