2748 கிராம உதவியாளர் காலிப் பணிகளை நிரப்ப அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

5ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ரூ.35,100 சம்பளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 

TN Village Assistant Recruitment 2022 – தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தற்பொழுது அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.10.2022 அன்று முதல் 07.11.2022 அன்று வரை சம்பந்தப்பட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த கிராம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற நபர்கள் தமிழ் நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை கீழ் காணலாம் வாங்க.

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம் (TN Village Assistant Recruitment 2022):

நிறுவனம் Tamilnadu Revenue Department
பணி கிராம உதவியாளர் 
மொத்த காலியிடங்கள்  2748
சம்பளம் Rs.11,100/– to Rs.35,100/-
பணியிடம் தமிழ்நாடு 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நாள் 10.10.2022
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.11.2022
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 30.11.2022
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் 15.12.2022 & 16.12.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tn.gov.in

கல்வி தகுதி:

  • விண்ணப்பிக்கும் நபர்கள் 05-ஆம் வகுப்பு தேர்ச்சி   பெற்றிருந்தால் போதும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரரர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? (Kirama Uthaviyalar Velaivaippu 2022)

  1. tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை கண்டறியவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Name of the District Notification Link
Kinathukadavu, Coimbatore Download Here>>
Bargur, Krishnagiri Download Here>>
Hosur, Krishnagiri Download Here>>
Denkanikottai, Krishnagiri Download Here>>
Koothanallur, Tiruvarur Download Here>>
Mannargudi, Thiruvarur Download Here>>
Nannilam, Thiruvarur Download Here>>
Thiruvarur (TK), Thiruvarur Download Here>>
Natrampalli, Tirupattur Download Here>>
Shoolagiri, Krishnagiri Download Here>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnadu Revenue Department அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2022
Advertisement