தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு 2021..! TNCSC Recruitment 2021..!
TNCSC Recruitment 2021: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது உதவுபவர் (Assistant), பட்டியல் எழுத்தர் (Record Clerk), காவலர் (Watchman) போன்ற பணிகளுக்கு மொத்தம் 190 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த TNCSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு 19.01.2021 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNCSC வேலைவாய்ப்பு (TNCSC Recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம். இப்பணியிடங்கள் நெல் கொள்முதல் பருவத்திற்கு மட்டும், மேலும் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. அதாவது 3 மாதம் முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே பணிபுரிவார்கள்.
சரி இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள TNCSC வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – அறிவிப்பு விவரம்:
நிறுவனம்: | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Recruitment 2021) |
வேலைவாய்ப்பின் வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 |
பணி: | உதவுபவர் (Assistant), பட்டியல் எழுத்தர் (Record Clerk), காவலர் (Watchman) |
மொத்த காலியிடங்கள்: | 190 |
பணியிடங்கள்: | கடலூர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 19.01.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | cuddalore.nic.in |
பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | மாத வருமானம் |
உதவுபவர் (Assistant) | 19 | ரூ. 2,359/- |
பட்டியல் எழுத்தர் (Record Clerk) | 82 | ரூ. 24,10/- |
காவலர் (Watchman) | 89 | ரூ. 2,359/- |
மொத்த காலியிடங்கள் | 190 |
கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் பணிக்கு B.Sc Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- உதவுபவர் பணிக்கு 12-ம் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- காவலர் பணிக்கு 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்யவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
குறிப்பு:
- தேர்வு செய்யப்படும் பட்டியல் எழுத்தர் ரூ.5,000/- காப்பு தொகையும், உதவுபவர்கள் ரூ. 2,000/- காப்பு தொகையும் செலுத்த வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம் நெல்லிக்குப்பம் ரோடு, கடலூர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- cuddalore.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2021
(TNCSC Recruitment 2021)-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - பின்பு விளம்பர அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதி அல்லது அதற்கு முன், மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |