Outdated Vacancy
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சி அறிவிப்பு 2021 | TNSTC Apprentice Recruitment 2021
TNSTC Apprentice Recruitment 2021: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்புப்படி 2019, 2020 & 2021 ஆண்டுகளில் பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு வருட அப்ரெண்டிஸ் பயிற்சி கற்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்புப்படி மொத்தம் 234 காலியிடங்கள் TNSTC மூலம் நிரப்பப்படும் மற்றும் இந்த காலியிடங்கள் பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் தயவு செய்து 31.10.2021 (Date Extended) வரை ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யுங்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அப்ரண்டிஸ் தேர்வு முறையானது அடிப்படை பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கோவை, கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் ஒரு வருடம் பயிற்சி பெறுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
TNSTC அப்ரண்டிஸ் தேர்வு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (Tamil Nadu State Transport Corporation Ltd) |
பணிகள் | Graduate Apprentices & Technician (Diploma) Apprentices |
மொத்த காலியிடங்கள் | 234 |
பயிற்சி நடைபெறும் இடம் | கோவை, கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 15.09.2021 |
NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி | 31.10.2021 (Date Extended) |
காலியிடங்கள் விவரங்கள்:
பயிற்சி நடைபெறும் இடம் | Graduate Apprentices | Technician Apprentices |
கோவை | 34 | 62 |
கும்பகோணம் | 29 | 54 |
விழுப்புரம் | 15 | 10 |
திருநெல்வேலி | 09 | 09 |
நாகர்கோவில் | 05 | 07 |
மொத்த காலியிடங்கள் | 234 |
சம்பளம்:
பயிற்சியின் போது வழங்கப்படும் சம்பளம்.
பணிகள் | சம்பளம் |
Graduate Apprentices | Rs.4,984/- |
Technician Apprentices | Rs.3,582/- |
கல்வி தகுதி:
- இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து Diploma/ Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- பொறியியல் பட்டதாரி/ டிப்ளமோ தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு இருக்கலாம்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
TNSTC வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள “TAMILNADU STATE TRANSPORT CORPORATION LTD (TNSTC) – REGIONS: Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil – Notification for the selection of Graduate and Diploma (Technician) Apprentices for the year 2021-22” பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
DATE EXTENSION NOTICE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNPL Recruitment 2021) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2021 |