டெக்டோனிக் தட்டுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

tectonic plates meaning in tamil

Tectonic Plates Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் டெக்டோனிக் தட்டுகள் என்றால் என்ன மற்றும் டெக்டோனிக் தட்டுகள் பற்றிய முழு விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக எல்லோரும் சூரியனை சுற்றியுள்ள 8 கோள்களை பற்றி மட்டும் படித்து இருப்போம். ஆனால் டெக்டோனிக் தட்டுகள் பற்றி அவ்வளவு சரியாக யாருக்கும் தெரியாது. ஆகையால் இன்றைய பதிவில் டெக்டோனிக் தட்டுகள் பற்றி தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்.

டெக்டோனிக் தட்டுகள் என்றால் என்ன.?

டெக்டோனிக் தட்டுகள் என்பது பூமியில் பாறைமண்டலத்தில் ஏற்படும் அதிர்வினை உணர்த்தும் புவியியல் கோட்பாடு ஆகும்.

இந்த கோட்பாட்டின் படி புவியின் மேலோடானது அடிக்கற்கோளம் மற்றும் மென்பாறைக்கோளம் என்ற இரண்டு வகையான அடுக்குகளால் ஆனது.

அத்தகைய மென்பாறைக்கோளத்தின் மீது இருபது தட்டுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அதில் 10 தட்டுகள் மட்டும் தனியாக பிரிந்து இருக்கின்றன. மீதம் உள்ள 10 தட்டுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மூன்று எல்லையாக பிரிந்து இருக்கின்றன.

அதுபோல பூமியில் நிலநடுக்கம் உருவாதல், எரிமலை வெடித்தல் மற்றும் மலைகள் உருவாதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் எல்லைகளில் இருக்கின்றன தட்டினை ஒட்டியே நடக்கிறது.

இத்தகைய நிகழ்வுகள் நடந்தால் புவியின் கண்ட தட்டுகள் 0 செ.மீ விலிருந்து 100 செ.மீ  வரை நகர்ந்து விடும்.

பத்து தட்டுகளின் பெயர்கள்:

 1. இந்தியா
 2. ஆப்பிரிக்கா
 3. அண்டார்டிக்கா
 4. ஆஸ்திரேலியா
 5.  வட அமெரிக்கா
 6. தென் அமெரிக்கா
 7. பசிபிக்
 8. யூரேசியா
 9. நாஸ்கா
 10. கோகோஸ் 

மூன்று தட்டு எல்லைகள்:

 1. உருமாறும் எல்லைகள் 
 2. ஒருங்கும் எல்லைகள் 
 3. விலகும் எல்லைகள்

உருமாறும் தட்டு எல்லைகள்:

ஒரு தட்டு மற்றொரு தட்டுடன் உரசுவதனால் அதனுடைய வடிவம் மாறிவிடுகிறது.

ஒருங்கும் தட்டு எல்லைகள்:

ஒருங்கும் தட்டு என்பது எல்லைகளில் ஒரு தட்டு மற்றொரு தட்டை தள்ளிக்கொண்டு செல்வதனால் ஒரு தட்டு மேலேயும் மற்றொரு தட்டு கீழையும் சென்று விடும்.

விலகும் தட்டு எல்லைகள்:

ஒரு தட்டு எப்போதும் மற்றொரு தட்டை தொடாமல் எல்லைகளில் எதிர் எதிராக விலகி செல்லும் தன்மை கொண்டதே விலகும் தட்டுகள் எனப்படும்.

இதையும் படியுங்கள்⇒ புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com