வெள்ளையாக இருக்கும் முடியில் இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க.. மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள்

black hair tips tamil

நரை முடி கருப்பாக மாற எண்ணெய் | black hair tips tamil

வெள்ளையாக இருக்கும் தலை முடியை கருப்பாக ஆக்குவதற்கு என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம். வயதானால் நரை ஏற்படும். ஆனால் இப்போது இளம் வயதிலும் நரை முடி ஏற்படுகிறது. வெள்ளை முடி வந்தால் வெளியே போவதற்கே கஷ்ட படுவார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் வெள்ளை முடி ஏற்படும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். வெள்ளை முடி எட்டி பார்க்கும் போதே சரி செய்துவிட வேண்டும். நமக்கு வயதாகிறது என்பதை காண்பிக்க நரை முடி வந்துவிடும். இதை சரி செய்வதற்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தாமல், வீட்டிலிருந்தே எளிமையான முறையில் எண்ணெய் செய்து நரை முடிக்கு குட் பாய் சொல்லுவோம்.

இந்த எண்ணெயையும் பயன்படுத்தி பாருங்கள் ⇒ வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

எண்ணெய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • கருஞ்சீரகப்பொடி-2 தேக்கரண்டி
  • மருதாணி இலை பொடி-2 தேக்கரண்டி
  • அவுரி இலை பொடி-2 தேக்கரண்டி
  • நெல்லிக்காய் பொடி-3 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய்- 150ml
  • கருவேப்பிலை- சிறிதளவு

எண்ணெய் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில் கருஞ்சீரகப்பொடி, நெல்லிக்காய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கருமை நிறம் வைத்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். வதக்கியது ஆறிய பிறகு அரைத்து வைக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகத்தூள் 2 தேக்கரண்டி , மருதாணித் தூள் 2 தேக்கரண்டி, அவுரி இலை தூள் 2 தேக்கரண்டி, நெல்லிக்காய் பொடி 2 தேக்கரண்டி, கருவேப்பிலை பொடி சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும். அதனோடு அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.  அதில் 150 ml தேங்காய் எண்ணெய் ஊற்றவும். தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வையுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடு வந்தவுடன் அந்த தண்ணீரில் கலந்து வைத்த கலவையை அந்த பாத்திரத்தோடு வைக்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வையுங்கள். அவ்ளோ தாங்க எண்ணெய் தயார்..!

தலையில் அப்ளை செய்யும் முறை:

நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் எண்ணெய் போலவே இந்த எண்ணையை தடவலாம்.  தினமும் இந்த எண்ணெயை தடவி வர  விரைவிலே வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.

முடிந்தவரை சத்துக்கள் அடங்கியுள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். டென்சன் ஆகாமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வெள்ளை முடி எட்டி பார்க்காமல் தவிர்க்கலாம்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil