பேசியல் செய்வது எப்படி.? | Facial Seivathu Eppadi
முன்னாடியெல்லாம் சுப நிகழ்ச்சிகள் ஏதும் வந்தால் மட்டும் பேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் என்று கணக்கு வைத்து பார்லருக்கு சென்று பேஷியல் செய்கிறார்கள். இதுவே வேலைக்கு செல்லும் பெண்கள் அடிக்கடி பேஷியல் செய்வார்கள்.
வீட்டிலிருக்கும் பெண்கள் பேஷியல் செய்ய வேண்டும் என்று பணம் கேட்டால் இப்போ என்ன உனக்கு, அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம் என்று சொல்லி விடுவார்கள். இனிமேல் காசு கொடுத்து பேஷியல் செய்ய அவசியம் இல்லை. வீட்டிலேயே பேஷியல் செய்யலாம். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Facial at Home in Tamil
Face Cleansing at Home in Tamil:
பேஷியல் பண்ணுவதற்கு முதல் படியாக முகத்தை Cleansing செய்ய வேண்டும். அதற்கு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி காட்டன் துணியை பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ள வேண்டும். அடுத்து காய்ச்சாத பால் 2 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும். இந்த பாலை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து முகத்தை கழுவி விடவும்.
Wheat Flour For Face Whitening in Tamil:
அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கோதுமை மாவு, 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும். கோதுமை மாவு முகத்தை பளிச்சென்று வைப்பதற்கு உதவுகிறது. இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவி விட வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ நீங்கள் பேஷியல் செய்பவராக இருந்தால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்
Face Steam at Home in Tamil:
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு Steaming உதுவுகின்றன. அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை கொதித்த தண்ணீரில் நனைத்து முகத்தில் வைத்து ஒத்தி எடுக்கவும். இந்த மாதிரி வைப்பதால் முகத்தில் அழுக்குகள் நீங்கும், எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.
Turmeric Face Pack For Facial in Tamil:
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸ் 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, கோதுமை மாவு 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். பீட்ரூட் சேர்ப்பதால் என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேல் கூறப்பட்டுள்ள வரிசையின் படி தான் பேஷியல் செய்ய வேண்டும். இந்த மாதிரி பேஷியல் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே.!
இதையும் படியுங்கள் ⇒ முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் !!!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |