இடுப்பிற்கு கீழ் தலை முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தேயுங்கள்..!

how to make herbal oil for hair growth at home in tamil 

முடி அடர்த்தியாக வளர எண்ணெய் | Herbal Hair Oil For Hair Growth At Home in Tamil 

பெண்கள் அனைவருக்குமே இடுப்பிற்கு கீழ் முடி வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை இருக்கின்ற அனைவரும் இந்த எண்ணெயை தேய்த்து குளித்தீர்கள் என்றால் உங்களுக்கு விரைவில் இடுப்பிற்கு கீழ் முடி வளரும். இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு நம்முடைய வீடுகளில் இருக்கும் பொருட்களே போதுமானது. இதை தயாரிக்கும் முறையும் மிகவும் எளிதானது. இந்த எண்ணெயை ஒருமுறை பயன்படுத்தினீர்கள் என்றால் பிறகு இந்த எண்ணெயை விடவே மாட்டீர்கள். அப்படிப்பட்ட சூப்பரான எண்ணெய் தாங்க இது. வாருங்கள் அந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று இப்பதிவில் படித்துத் தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Herbal Hair Oil For Hair Growth At Home in Tamil:

ஹேர் ஆயில் செய்ய தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய்-1 லிட்டர் 
  2. வெந்தயம்- 1 ஸ்பூன் 
  3. கருஞ்சீரகம்- 1 ஸ்பூன் 
  4. செம்பருத்தி பூ- 10
  5. செம்பருத்தி இலை- 10
  6. கறிவேப்பில்லை  1 கைப்பிடி 
  7. வேப்பிலை- 1 கைப்பிடி 
  8. சின்ன வெங்காயம்- 100 கிராம்

How to Make Hair Oil At Home For Hair Growth in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு மிக்சி ஜாரில் வெந்தயம், கருஞ்சீரகம், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை மற்றும் வேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இதில் தண்ணீர் ஊற்ற கூடாது. அதே போல் நாம் அரைக்கும் பொருட்களிலும் தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்துவிட்டு பிறகு அரைக்க வேண்டும்.

ஸ்டேப்: 2

அதன் பின் சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கி விட்டு அதனுடைய நச்சு எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நச்சு வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

 

ஸ்டேப்: 3

Hair Oil For Hair Growth At Home in Tamil

வெங்காயம் சிவந்து சாறு இறங்கிய பிறகு, அதில் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்: 4

இந்த எண்ணெய் நல்ல பச்சை நிறமாகும் வரை கொதிக்கவிடுங்கள். பிறகு அடுப்பை ஆப் செய்து 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து ஆற விடுங்கள்.

 hair growth oil home remedies in tamil

ஸ்டேப்: 5

10 நிமிடம் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

 

 homemade herbal hair oil for hair growth in tamil

தயார் செய்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறை தலை குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே தலையில் தேய்த்து வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை இப்படி பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவடைந்து முடி அதிகமாக வளரும். பொடுகு பேன் என எந்த பிரச்சனையும் இருக்காது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil