கருமையாக உள்ள உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Make Rose Lip Balm at Home in Tamil

How to Make Rose Lip Balm at Home in Tamil

நமது முகத்தின் மிகவும் மென்மையான பகுதி என்றால் அது நமது உதடுகள் தான் பொதுவாக ஒரு சிலரின் உதடுகள் கருமையாக இருக்கும். அதனை மறைப்பதற்காக சில வேதிப்பொருள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.

அப்படி வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவதால் நமது உதடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி லிப் பாம் தயாரிப்பது எப்படி என்று பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Make Lip Balm at Home Naturally in Tamil:

How to Make Lip Balm at Home Naturally in Tamil

 

இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி லிப் பாம் தயாரிப்பது என்று விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பன்னீர் ரோஸ் – 2
  2. தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் 
  3. வாசலின் – 1 டீஸ்பூன் 
  4. வைட்டமின் E கேப்சூல் – 2

ரோஸ் இதழ்களை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 பன்னீர் ரோஸ்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சியில்  சேர்த்து அதனுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள்.

இதையும் படித்துபாருங்கள்=> கருப்பான உதடுகள் உள்ளதா? ஆண்கள் பெண்கள் இருவருமே இதை ட்ரை பண்ணுங்க

தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்:

இப்பொழுது நாம் வடிக்கட்டி வைத்துள்ள சாற்றுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வாசிலினை சேர்க்கவும்:

பின்னர் அதனுடனே 1 டீஸ்பூன் வாசிலினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூல்களை சேர்க்கவும்: 

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூல்களில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கலந்து ஒரு சிறிய மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

இதனை உதடுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் உங்களின் உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துபாருங்கள்=> முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்