ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும் .!

Omavalli Hair Dye in Tamil

நரை முடி கருமையாக ஹேர் டை தயாரிக்கும் முறை | Omavalli Hair Dye in Tamil 

பெரியவர்களுக்கு நரை முடி பிரச்சனை இருந்தால் ஒன்று கவலைப்பட தேவை இல்லை.. ஆனால் இப்போது எல்லாம் சிறிய வயதில் இருப்பவர்களுக்கு கூட நரை முடி பிரச்சனை வந்துவிடுகிறது. ஆக இந்த நரைமுடிக்கு Solution தேடுகின்றன. அந்த Solution இயற்கையான முறையாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது செயற்கையானதாக இருந்தால் பின் அதிக பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். என்றுமே இயற்கையான முறைகளை பின்பற்றுவது மட்டுமே சிறந்த முறையாகும். உங்கள் நரை முடிக்கு இயற்கையான வழிமுறையை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் ஒரு ஹேர் டை தயார் செய்யும் முறையை தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன ஹேர் டை என்று இப்பொழுது பார்த்துவிடலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. ஓமவல்லி இலை – 10
  2. அவுரி இலை பொடி – ஒரு ஸ்பூன்
  3. நெல்லிக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  5. தேங்காய் பால் – மூன்று ஸ்பூன்

இதையும் க்ளிக் செய்து படியுங்கள் 👇
பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலே Gold Facial செய்துகொள்ளமுடியும்..!

செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் ஓமவள்ளி இலையை பறித்து நன்றாக அலசிக்கொள்ளுங்கள். பிறகு சிறிய உரல் வீட்டில் இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஓமவள்ளி இலையை சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அவற்றில் இருந்து சாறு பிழிந்து வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் அதனுடன் மூன்று ஸ்பூன் தேங்காய் பால், ஒரு ஸ்பூன் அவுரி பொடி, ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பின் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

அவ்வளவு தான் இயற்கை ஹேர் டை தயார். இந்த ஹேர் டையை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் காத்திருக்கவும். பிறகு எப்போதும் போல தலை அலசலாம்.இந்த ஹேர் டையை வாரத்திற்கு மூன்று முறை என்று தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் போதும் உங்கள் தலையில் இருக்கும் நரை முடி முழுமையாக கருமையாக மாறிவிடும்.

இதையும் க்ளிக் செய்து படியுங்கள் 👇
இளநரை பிரச்சனையா? இளநரைக்கு உடனடி தீர்வு!!!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
SHARE