முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!

silky hair pack at home in tamil

தலை முடி மிருதுவாக மாற | Thalai Mudi Neelamaga Valara

தலை முடி பிரச்சனை அனைவர்க்கும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தலை குளித்த பின் தலை முடி சிக்காக மாறி முடி கொட்டிவிடும். தலை குளிக்கும் முன் முடி சிக்கு இல்லாமல் இருக்கும். ஆனால் குளித்த பின் முடி சிக்காக இருக்கும். இதனை சரி செய்ய குளிக்கும் முன் இந்த ஹேர் பேக் தடவி குளிக்கவும். அப்போது தான் தலை முடி நீளமாகவும், கொட்டாமலும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும். அதற்கு நிறைய காசு செலவாகும் என்று நினைப்பீர்கள். அது முற்றிலும் தவறு. வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து தலை முடியை மிருதுவாக மாற்றலாம் வாங்க..!

Silky Hair Pack at Home in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல் – 1 கொத்து
  • கான்பிளவர் மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் – 1

செய்முறை:

தேங்காய் பால்

முதலில் ஒரு தேங்காயில் உள்ள பாலை எடுத்துக் கொள்ளவும் அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றவும்.

 silky hair pack at home in tamil

அதன் கூடவே கான்பிளவர் மாவு – 4 டேபிள் ஸ்பூன் அதில் சேர்த்து நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து குறைவான தீயில் வைத்து நன்கு கலந்துவிடவும்.

அது ஒரு மாதிரி கெட்டியாக கலந்து தண்ணீர் போல் வரும் போது அதனை இறக்கி விடவும்.

அடுத்து சூடு ஆறியதும் அதில் கற்றாழையை ஜெல் போல் சீவி அதில் சேர்த்து 3 பொருளையும் நன்றாக கலந்து விடவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!

பயன்படுத்தும் முறை:

தலையில் எண்ணெய் வைக்காமலும் பயன்படுத்தலாம். எண்ணெய் வைக்காமல் பயன்படுத்தினால் ஷாம்பு தேவையில்லை.

எண்ணெய் வைத்து தலையில் அப்ளை செய்தால் ஷாம்பு சீயக்காய் எதுவேண்டுமாலும் பயன்படுத்தலாம். எண்ணெய் வைக்காமல் பயன்படுத்தினால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

முதலில் வேரிலிருந்து ஆரம்பித்து அதன் பின் முடி நுனி வரை அப்ளை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் தலைமுடி மிருதுவாகவும், அடர்த்தியாகும் இருக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பனிக்காலத்தில் பொலிவிழந்து காணப்படும் முகம் நன்கு பொலிவு பெற இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil