உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த பொருள் இருக்கா..! அப்போ இந்த பொருளை தெரியாமல் கூட தானம் செய்யாதீர்கள்..!

veetil dhanam in tamil

தானம் கொடுக்க கூடாத பொருட்கள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆன்மீக பதிவில் தானம் கொடுக்க கூடாத பொருட்கள் என்னவென்று தெரியுமா? அப்படி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமையல் அறை என்றால் சொல்லவே வேண்டாம் நிறைய பொருட்கள் வைத்து இருப்பார்கள். அதுபோல சமையல் அறையில் வைத்து இருக்கும் பொருட்களில் ஒரு சில பொருளை மறந்தும் கூட தானமாக கொடுக்கக்கூடாது. ஏன் கொடுக்க கூடாது என்று யோசிக்கிறீர்களா. ரொம்ப யோசிக்க வேண்டாம் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கல்யாணம் ஆனா பெண்கள் புகுந்த வீட்டிற்கு இந்த                                                   பொருட்களை எடுத்து வராதீர்கள்

சமையல் அறையில் உள்ள பொருள்:

வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த நாளாக இருக்கிறது. அப்படி தெய்வத்தை நீங்கள் வழிபட்டு கொண்டிருக்கும் போது சில பொருட்களை தானமாக கொடுக்காதீர்கள். உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் சர்க்கரையை வெள்ளிக்கிழமை தானமாக கொடுக்காதீர்கள்.

இந்த நாளில் சர்க்கரையை தானமாக கொடுப்பது பொருளாதார பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி யாரிடமும் கடன் வாங்குவது, கொடுப்பது உங்கள் வீட்டில் பண நெருக்கடியை ஏற்படுத்தும்.

வீட்டில் தானம் கொடுக்க கூடாத பொருட்கள்:

நாம் மற்றொருவருக்கு எதாவது ஒரு பொருளை தானமாக கொடுக்கும்போது நம்முடைய பாவம் கழியும் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. சில பொருட்களை தானமாக கொடுத்தால் நமக்கு கஷ்டம் ஏற்படும். அது என்ன பொருட்கள் என்று கீழே கொடுக்கப்படுள்ளன.

  • துடைப்பம் 
  • கிழிந்த துணி 
  • கத்தரிக்கோல் 
  • சில்லறை காசு 

துடைப்பத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது உங்கள் வீட்டில் உள்ள செல்வத்தை தானமாக கொடுப்பதற்கு சமம். அதனால் உங்களுக்கு பண பிரச்சனை வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

ஒருபோதும் கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்காதீர்கள். நல்ல துணிகளை மட்டும் தான் தானமாக கொடுக்க வேண்டும். கிழிந்த துணி மற்றும் உடைந்த பொருளை தானமாக கூடுக்காதீர்கள்.

வீட்டில் உள்ள கத்தரிக்கோல், கத்தி, ஊசி இது போன்ற பொருள்களை தானமாக கொடுக்காதீர்கள். அப்படி மீறி கொடுத்தால் உங்களுக்கு பல கஷ்டம் வரலாம்.

நினைத்த காரியம் தடைபடாமல் இருக்க:

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் தங்களுடைய மனதில் ஆசை என்று இருக்கும். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது இயல்பானது.

அப்படி இருக்கும் போது நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று பணத்தை ஒரு போதும் வேறு யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள். அது மாதிரி தானம் செய்யும்போது நீங்கள் நினைத்த காரியம் தடைபடும் என்று சொல்வது ஐதீகம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்