Dos and Don’ts During Mahalaya Paksha in Tamil | மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.! | மகாளய பட்சம் தவிர்க்க வேண்டியவை
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் வரும் பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் மகாளய பட்சம் ஆகும். இந்துக்களின் விரத நாட்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது முன்னோர்களை வழிபடுவதற்குரிய காலம் ஆகும். மகாளய என்றால் கூட்டாக வருதல் என்று பொருள்படும். பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள்படும். இறந்த நம் முன்னோர்களை எமதர்மராஜா பூமிக்கு அனுப்பி வைக்கும் காலம் என்று கூறப்படுகிறது.
அதாவது, நம் முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 15 நாட்கள் பூமியில் வந்து இருக்கும் காலம் ஆகும். மகாளய பட்சத்தின் நிறைவான காலமே மகாளய அமாவாசை ஆகும். இந்த 15 நாட்களுமே இறந்த நம் முன்னோர்களுக்கு வழிபாடு செய்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நம் அனைத்து முன்னோர்களும் நம்மை ஆசிர்வதித்து குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள். எனவே, மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்த மாதிரி நாம் இருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மகாளய பட்சம் என்றால் என்ன.? மகாளய பட்சம் 2024 எப்போது தொடங்குகிறது.?
மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
செய்ய கூடாதவை | What to Do During Mahalaya Paksha in Tamil:
- மகாளய பட்ச காலத்தில் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை வீட்டில் சேகரித்து வைக்க கூடாது.
- அசைவ உணவுகளை சாப்பிட கூடாது.
- மகாளய பட்சத்தில் விரதம் இருப்பவர்கள் 15 நாட்களும் நகம் வெட்டுதல், முடி வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
- மகாளய பட்ச காலத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்ய கூடாது.
- வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் எதையும் வாங்க கூடாது.
- முக்கியமாக, செருப்பு, ஆடை போன்ற பொருட்களை வாங்க கூடாது. ஆனால், பிறருக்கு தானம் கொடுக்கலாம்.
- இந்த 15 நாட்களில் நம் முன்னோர்கள், நம் வீட்டிற்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வருவார்கள். ஆகையால், மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கு, பறவைகள் போன்றவற்றை உதாசினப்படுத்துதல் கூடாது.
- விரதத்திற்காக சமைக்கும் உணவுகளில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்க்க கூடாது.
- மகாளய பட்ச விரதம் இருப்பவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுப்படக்கூடாது.
- புதிய வீடு, புதிய வாகனம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், இக்காலத்தில் புதிய வீடு அல்லது வாடகை வீடு குடி போக கூடாது.
புரட்டாசி அமாவாசை 2024 எப்போது.?
செய்ய வேண்டியவை | What Not to Do on Mahalaya Amavasya in Tamil:
- மகாளய பட்ச காலத்தில் காலையில் எழுந்து நம் முன்னோர்களுக்கு வழிபாடு செய்து வணங்கிய பிறகு தான், பூஜை அறையில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட வேண்டும்.
- 15 நாட்களில் தினமும் ஒரு உயிரினத்திற்காவது உணவு அளிக்க வேண்டும்.
- 15 நாட்களும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- இந்த காலத்தில், நாம் செய்யவும் தான தர்மங்களை நம் முன்னோர்கள் நேரடியாக ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதனால், முடிந்த அளவிற்க்கு நம்மால் இயன்ற தான தர்மங்களை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.
- பித்ருதோஷம், பித்ரு சாபம் இருபவர்கள், மகாளய பட்ச காலத்தில் முறையாக விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
- பசு, காகம், நாய் போன்ற உயிர்னங்களுக்கு எள் கலந்த உணவுகளை அளிக்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |