குரு பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்…! அப்போ உங்க ராசி என்னா ராசி..?

குருபெயர்ச்சி பலன்கள் 2023

ஆண்டுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி போன்ற நிகழ்வுகள் ஜோதிடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற பெயர்ச்சியின் போது அனைத்து ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன்கள் இருப்பது இல்லை. ஏனென்றால் ஆன்மீகத்தை பொறுத்தவரை மொத்தம் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளது. இது ஒவ்வொன்றிற்கும் அதனுடைய ராசி மற்றும் நட்சத்திரம் படி தான் பலன்கள் அமைகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான குரு பெயர்ச்சி ஆனது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். ஆகையால் இத்தகைய பெயர்ச்சியின் காரணமாக சில ராசிக்காரர்கள் எல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்று பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்.. என்னப்பா இப்படி சொல்றீங்க எந்த ராசி அது.. 

Guru Peyarchi Palangal 2023:

2023 ஆண்டிற்கான குரு பெயர்ச்சி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் யாரென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிதுன ராசி:

மிதுன ராசி

ராசியில் மூன்றவது ராசியாகவும் இரண்டு பெண்களை அமைப்பாகவும் கொண்டுள்ள ராசி தான் மிதுன ராசி. குரு பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியம், பணியிடம் இதில் இரண்டிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதோடு மட்டும் இல்லாமல் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அக்டோபர் மாதம் வரை கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேஷ ராசி:

மேஷம் ராசி

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த நேரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் நிதிநிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகவே எந்த செயலிலும் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

தனுசு ராசி:

தனுசு ராசி

 

தனுசு ராசிக்காரர்களுக்கு இத்தகைய குரு பெயர்ச்சி காரணமாக இத்தகைய காலமானது கொஞ்சம் சவாலாக உள்ளது. அதனால் எதிலும் கவனக்குறைவாக இருக்க கூடாது. அதுமட்டும் தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புமும் உள்ளது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் தனுசு ராசிக்காரர்கள் பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீண்ட தூர பயணங்கள் செல்வதை தவிர்ப்பதும் நல்லது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ ராகு கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்.. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்