உங்கள் கடன் பிரச்சனை அனைத்தும் தீர 3 கிராம்பு மட்டும் போதும்..!

Kadan Prachanai Pariharam

Kadan Prachanai Pariharam

மனிதனாக பிறந்த அனைவருக்கும் கடன் பிரச்சனை இருக்கும். கடனை அடைக்க பலரும் போராடி கொண்டு இருக்கிறோம். கடனை அடைக்க முயற்சித்து கொண்டு இருக்கும் வேலையில் அதற்கான பரிகாரங்களை செய்வதன் மூலம் விரைவாகவும் எளிதாகவும் கடனை அடைத்து விடலாம். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பல  பரிகாரங்களை செய்து வருவார்கள். எந்தவொரு பரிகாரத்தையும் நாம் முழு மனதோடு வேண்டி கொண்டு செய்வதன் மூலம் அது நமக்கு பலன் அளிக்கும். கடன் பிரச்சனையை தீர்க்க பல பரிகாரங்கள் உள்ளது. அந்தவகையில் இன்றைய பதிவில் கடன் பிரச்சனையை தீர்க்கும் கிராம்பு பரிகாரம் எப்படி செய்வது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம் | Vasambu Pariharam

Remedies For Debt Problems in Tamil:

கடன் பிரச்சனை தீர கிராம்பு பரிகாரம் செய்யலாம். இரவு தூங்கும் முன் இப்பரிகாரத்தை செய்யுங்கள்.

 remedies for debt problems in tamil

இரவு தூங்கும் முன் 3 கிராம்பினை எடுத்து கொள்ளுங்கள். மூன்று கிராம்பினை உங்கள் இடது கையில் வைத்து கொண்டு கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள். அதாவது உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட வேண்டும் என்று கூறி பிராத்தனை செய்யுங்கள்.

பிறகு, ஒரு மண் அகல் விளக்கை எடுத்து கொள்ளுங்கள். இப்போது மண் அகல் விளக்கில், நீங்கள் கையில் வைத்து பிராத்தனை செய்த 3 கிராம்பு மற்றும் 1 சூடம் ஆகிவற்றை சேர்த்து எரிய விடுங்கள்.

 கடன் பிரச்சனை தீர பரிகாரம்

கிராம்பு எரிவதை நீங்கள் பார்த்துக்கொண்டே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். கிராம்பு முழுவதுமாக எரியும் வரை பிராத்தனை செய்ய வேண்டும்.

அதாவது, கிராம்பு எரிந்து கரைவதை போன்று உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையும் எளிதில் கரைந்து விடும்.

 kadan prachanai theera pariharam in tamil

அதன் பிறகு, உங்களின் குலதெய்வத்தை வணங்கி கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து கடனை அடைப்பதற்கான முயற்சிகளை தொடங்குங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து அதனுடன் கடன் அடைப்பதற்கான முயற்சியினையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

7 கல் உப்பு கேட்டது கிடைக்க வைக்கும்.. இதை மட்டும் செய்யுங்கள்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்