செவ்வாய்க்கிழமை பரிகாரம் | Kadan Thollai Neenga Pariharam
கடன் என்பது மனிதாக பிறந்த எல்லோருக்குமே இருக்கும். ஒவ்வொருவருமே ஒவ்வொரு பயன்பாட்டிற்க்காக கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால் அந்த கடனை அடைக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு வருவார்கள். அப்படி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர பல பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் ஒன்றை பற்றி இப்பதிவில் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்செய்து வந்தால் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும். வாருங்கள் அந்த பரிகாரம் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
கடன் தொல்லை தீர பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் இருகைகளிலும் கல் உப்பை எடுத்து உங்கள் பூஜை அறையில் உள்ள லக்ஷ்மி படத்திற்கு முன்னால் நின்று எங்கள் வீட்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டி கொள்ளவேண்டும்.
மற்றவர்களிடம் இருந்து இந்த 3 பொருட்களை தானமாக வாங்காதீர்கள்..! கடன் சுமை அதிகரிக்கும்..! |
பிறகு அந்த கல் உப்பை ஒரு தாம்பூல தட்டில் முழுவதுமாக பரப்பி வைக்க வேண்டும். இந்த கல் உப்பின் மேல் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அந்த கடன் தொகையை உங்களின் ஆள்காட்டி விரலால் எழுத வேண்டும்.
அதன் பின், அந்த கல் உப்பின் மேல் ஒரு துண்டு விரலி மஞ்சளை வைத்து லக்ஷ்மி படத்திற்கு முன்னால் வைக்க வேண்டும். இதை நீங்கள் 11 நாட்கள் வரை பூஜை அறையில் வைக்க வேண்டும்.
பிறகு நீங்கள் உங்களின் கடன் பிரச்சனை தீர என்னென்ன முயற்சிகள் எடுக்கிறீர்களோ அதை தினமும் எடுத்துக்கொண்டே இருங்கள்.
வீட்டில் பணம் தங்க வேண்டுமா.. அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. |
11 நாட்கள் கழித்து விரலி மஞ்சளை எடுத்து பூஜை அறையில் வைத்துவிட்டு உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இதை கரைத்து விடும் போது உங்கள் கடன் பிரச்சனையும் இந்த கல் உப்பு போல் கரைந்து விட வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும்.
உங்களுக்கு குறைந்த அளவில் கடன் இருந்தால் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தால் போதும். அப்படி இல்லாமல் உங்களுக்கு அதிக அளவில் கடன் இருக்கிறது என்றால் இந்த பரிகாரத்தை மூன்று முறை செய்ய வேண்டும்.இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |