தொழிலில் வெற்றி பெற
நமது வாழ்க்கையில் நடக்கும் நல்லது மற்றும் கெட்டதை ஜோதிடத்தை வைத்து கணிக்கலாம். நமக்கு நல்லது நடப்பதாக இருந்தாலும் சரி, தீயவை நடப்பதாக இருந்தாலும் சரி அது முன்கூட்டியே தெரிந்தால் அதில் சற்று கவனமாக இருக்கலாம். அந்த வகையில் தொழில் செய்பவர்களுக்கு அதிலிருந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் மார்ச் 15 தேதி சூரியன் மீன ராசிக்கு சஞ்சரிக்கிறார். இதில் சிலருக்கு நல்லவை கொடுக்கலாம், சிலருக்கு தீயவை ஏற்படுத்தும். ஆனால் குருவுடன் மீன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் 3 ராசிகளுக்கு தொழிலில் நல்ல முனேற்றத்தை ஏற்படுத்த போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மகர ராசி:
உங்கள் வாழ்க்கையில் இருந்த பெரிய மற்றும் சிறிய பிரச்சனைகள் எளிதில் சரியாகிவிடும். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, பணியிடத்தில் வேலை செய்பவராக இருந்தாலும் சரி லாபம் அதிகரிக்கும். சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.
தனுசு ராசி:
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை செய்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் வேலை இல்லாதவர்களுக்கு வெளி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
துலாம் ராசி:
இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் அலுவலகம் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலும் எல்லா செயல்களிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களின் வெற்றியை கண்டு பொறாமைப்படுபவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி:
வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இது வரைக்கும் தடைபட்டு இருந்த காரியம் கூட தீர்வுக்கு வரும். வேலையிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுன ராசி:
இந்த மாதம் உங்களின் பணிக்கான பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் திறமையை கண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மையை மட்டும் அள்ளி தருகிறது.
மேஷ ராசி:
இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். பணியிடத்தில் இருக்கும் சவால்களை எதிர்கொள்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்ப்பார்க்காத லாபத்தை கொடுக்கும். உங்கள் துணையுடன் ஒற்றுமை பலப்படும்.
சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |