மார்ச் 31 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் எல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்….

Mercury Rising in Aries Is a Sign To Watch Out For in Tamil

Mercury Rising in Aries Is a Sign To Watch Out For in Tamil

ஜோதிடத்தில் 12 ராசிகளின் பலன்களும் கிரகங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் புத்திசாலி, வியாபாரம் மற்றும் பேச்சு ஆகிவற்றின் காரணியாக கருதப்படும் புதன் மீன ராசிக்கு மார்ச் 16 ஆம் தேதி நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி மேஷ ராசியில் நுழையும் புதன் அந்நாளிலேயே பிற்பகல் 2.44 மணிக்கும் மேஷ ராசியில் உதயமாக உள்ளார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஓகே வாருங்கள் அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசிக்கார்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யக்கூடாது ?

 

மேஷ ராசியில் புதன் உதயமாக உள்ளதால் 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்:

ரிஷபம்:

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 வது வீட்டில் புதன் உதயமாவதால் வீட்டில் குடும்ப பிரச்சனை, குழந்தைகளுக்கு  ஆரோக்கிய பிரச்சனை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வபர்கள் தொழில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. வேலையை இழப்பதற்கான சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு படிப்பை கைவிடும் எண்ணம் வரலாம். அதுமட்டுமின்றி சமூகத்தில் உங்கள் பெயர் பாழாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடகம்:

கடகம்

கடக ராசியின் 10 வது இடத்தில் புதன் உதயமாவதால் கடக ராசிக்காரர்கள் வேலைகளில் சிரமத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக பணியாளர்கள் உங்கள் பெயர்களை களங்கப்படுத்துவார்கள். வேலையின் சுமையின் காரணமாக மன அழுத்தம் உண்டாகக்கூடும். இதனால் நீங்கள் பார்க்கும் வேலையை இழக்கும் வாய்ப்பும் உருவாகும். எனவே கடக ராசிக்காரர்கள் மார்ச் 31 ஆம் தேதி முதல் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி:

கன்னி

கன்னி ராசியின்-8 ஆவது இடத்தில் புதன் உதயமாக உள்ளதால் கன்னி ராசிக்காரர்கள்  பணத்தை நிலையாக செலவு செய்ய போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற விரும்பினால் புதிய வேலை கிடைக்கும். ஆனால் பிறகு வருத்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே கன்னி ராசிக்காரர்கள் பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது..!

கும்பம்:

கும்பம்

கும்ப ராசியின் 3-வது வீட்டில் புதன் உதயமாக உள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு உடன்பிறந்தவர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் பண சிக்கல்கள் நேரிடாவும் வாய்ப்பு உள்ளது. சுயதொழில் செய்பவர்கள் இக்காலத்தில் முதலீடு செய்ய வேண்டாம். வணிகர்கள் ஒப்பந்தம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் மற்றவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்