வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?

mistakes to avoid while using rock salt in tamil

கல் உப்பு 

அனைவருடைய வீட்டிலும் சமையலுக்கு என்று நிறைய வகையான பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு சிலர் வீட்டில் ஒரு பொருள் இருக்கும் மற்றொரு வீட்டில் அந்த பொருள் இல்லாமலும் இருக்கும். ஆனால் அனைவருடைய வீட்டிலும் என்றும் தீராத ஒரு பொருளாக இருக்கிறது என்றால் அது கல் உப்பு மட்டும் தான். நாம் சாதாரணமாக நினைக்கும் கல் உப்பு நிறைய விஷயங்களுக்கு பரிகாரமாகவும் மற்றும் கடன் பிரச்சனையை சரி செய்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பரிகாரத்திற்கு கல் உப்பை எப்போதாவது பயன்படுத்தினாலும் கூட தினமும் சமையலுக்கு இதனை பயன்படுத்தி வருகிறோம். அப்படி வீட்டில் சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்தும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன எனபது பற்றி இன்றைய ஆன்மிக பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ சுக்கிர ஹோரையில் கல் உப்பை தொட்டால் இத்தனை மகிமையா? 

வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன..?

கல் உப்பு வைக்கும் முறை:

கேட்டதை கொடுக்கும் கல் உப்பு

மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய கல் உப்பை நாம் பிளாஸ்டிக் பத்திரத்திலேயோ அல்லது சில்வர் பத்திரத்திலேயோ வைக்க கூடாது. தினமும் நாம் பயன்படுத்தும் கல் உப்பை பீங்கான் பாத்திரத்தில் முழுவதுமாக நிரப்பி மேல் நோக்கி வைக்காமல் கீழ் நோக்கி வைக்க வேண்டும். இப்படி உப்பை கீழ் நோக்கி வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

உப்பை பிறருக்கு கொடுக்கும் முறை:

கல் உப்பு மகிமை

ஒருவருக்கு கடனாக உப்பினை கொடுக்கும் போது உப்பை எடுத்து அப்படியே கொடுக்க கூடாது. ஏனென்றால்  கல் உப்பு அப்படியே கொடுக்கும் போது நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்கள் மற்றவர்க்கும் அவர்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் நம்மிடம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது .

அதனால் நீங்கள் பிறருக்கு உப்பை கொடுத்தாலோ அல்லது பிறரிடம் இருந்து உப்பினை வாங்கும் போதும் உப்பிற்கு மேல் ஒரு துளசி இலையினை வைத்து கொடுத்தால் அது தானத்திற்கு சமம் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

💁‍♀️வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

உப்பினால் கோலம் போடும் முறை:

கல் உப்பு பரிகாரம்

வீட்டில் செல்வம் பெருக மஹாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்த கல் உப்பால் கோலம் போடா கூடாது. அதுமட்டும் இல்லாமல் கல் உப்பை கால்களில் படுமாறு தரையில் கொட்ட கூடாது. இதுபோன்ற தவறினை நாம் செய்யும் போது மஹாலக்ஷ்மி நமது வீட்டிற்கு வராது என்று சொல்லப்படுகிறது.

ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று தவறுகளையும் கல் உப்பை பயன்படுத்தும் போது செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்