நீங்கள் நினைத்த காரியம் நடக்க பேப்பரில் இந்த மாதிரி எழுதி வையுங்க..!

ninaitha kariyam nadakka pariharam in tamil

நினைத்த காரியம் உடனே நடக்க

கஷ்டம் இல்லாத மனிதர்கள் என்று யாரும் இருக்கிறார்களா..? யாரிடம் பேச ஆரம்பித்தாலும் அவர்களின் கஷ்டத்தை லிஸ்ட் போட்டு சொல்ல  ஆரம்பித்து விடுவார்கள். சில கஷ்டங்களை பரிகாரங்கள் மூலம் சரி செய்யலாம். அந்த வகையில் சில பேர்கள் ஏதாவது மனதில் நினைத்து அந்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் மனதில் நினைத்து நடக்க வேண்டும் என்ற காரியத்தை பரிகாரம் மூலம் செய்ய வைக்கலாம் என்று சொன்னால் அதை பண்ணாமல் இருப்போமா.! வாங்க அதற்கான பரிகாரத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

நினைத்த காரியம் நடக்க பரிகாரம்:

நினைத்த காரியம் நடக்க பரிகாரம்

முதலில் ஒரு மூடி போட்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 5 அன்னாசி பூ, நீங்கள் எடுக்கும் பாத்திரத்தில் 1/4 பகுதி பெருஞ்சீரகம், தூய்மையான Plain பேப்பர், கோரிக்கையை எழுதுவதற்கு ஒரு பேனா போன்றவை பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள்.

பேப்பரில் நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பதை அந்த சிறிய பேப்பரில் எழுத வேண்டும். கோரிக்கையாக எழுத கூடாது. நீங்கள் நடக்க வேண்டும் என்ற காரியத்தை நடந்து விட்டது போல் எழுத வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  உங்கள் வீட்டில் இந்த 3 இடத்திலும் உப்பை வையுங்கள்..! பணம் கஷ்டமே இருக்காது..!

எடுத்துக்காட்டிற்கு 10 லட்சம் பண வேண்டும் என்று வைத்து கொள்வோம். 

இதை அந்த பேப்பரில் எனக்கு 10 லட்சம் கிடைத்து விட்டது. அல்லது 10 லட்சம் பணம் பெறுகிறேன் என்று POSITIVE ஆக எழுத வேண்டும். 

எழுதிய பிறகு நீங்கள் எழுதியதை படியுங்கள். எப்படி படிக்க வேண்டுமென்றால் நீங்கள் எழுதிய காரியம் நடந்தால் எப்படி சந்தோசம் படுவீர்களோ அந்த மாதிரி நினைத்து சந்தோசமாக படிக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை புதன் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை, பௌணர்மி போன்ற நாட்களில் செய்யலாம்.

பரிகாரம் செய்வதற்கு உகந்த நேரம் அதிகாலை 04.00 AM மணி முதல் 07.00 AM  மணி வரை செய்யலாம். இல்லையென்றால் மாலை 06.00 PM மணி முதல் 11.00 PM வரை செய்யலாம்.

பரிகாரம் செய்முறை:

ஒரு மூடி போட்ட பாத்திரத்தை எடுத்து அதில் 1/4 பகுதி நிரம்பும் வரை சோம்பு, அதன் மேலே 5 சோம்பு, அதன் மேலே எழுதி வைத்த பேப்பர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.

நீங்கள் எழுதி வைத்திருக்கின்ற காரியம் நடக்கும் வரை தினமும் எடுத்து 2 நிமிடங்கள் படித்து கொண்டே இருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒  காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்