பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

Palli vilum palan in Tamil

உடலில் பல்லி எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்

Palli vilum palan in Tamil – தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவு கொஞ்சம் படிப்பதற்கு ஆர்வமான பதிவாக இருக்கும். அதாவது அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக பல்லி இருக்கு இருக்கும்.. இந்த பல்லி நமது உடலில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்பதை பற்றி தான்.. பல்லி நமது உடலில் எந்த இடத்தில் விழுந்திருந்தாலும் அந்த பலன் ஒரு நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும். அது நமது உடலில் விழும் இடத்தை பொறுத்து நல்லதாக இருக்கலாம்.. அல்லது கெட்ட பலன்களாக இருக்கலாம். சரி வாங்க பல்லி உடலில் எந்த இடத்தில் விழுந்த அதிர்ஷ்டம் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? | Palli vilum palan in Tamil

பல்லி நமது நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி உண்டாகுமாம். அதாவது புகழ் பாராட்டு இது போன்ற விஷயங்கள் ஏற்படும்.

நெற்றியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சியம் என்று சொல்ல படுகிறது. அதாவது உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி, சந்தோசம் இதுபோன்ற சூழ்நிலைகள் உண்டாகுமாம்.

வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் உங்கள் வீட்டில் தானியம் வரவு அதிகரிக்கும், குறிப்பாக விவசாய மக்களுக்கு உற்பத்தி அதிகரிக்கலாம். வீடாக இருந்தால் உணவுக்கு தேவையான பொருட்கள் அதிகமாக சேரும்.

கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் உங்களுக்கு சுகம் உண்டாகும். உங்களுக்குள் இருக்கும் பயம், சோகம், கோபம், கவலை, வேதனை இவை அனைத்தும் நீங்கி சுகம் உண்டாகும்.

தோளின் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும்.

தோளின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றியில் முடிவடையும்.

பிருஷ்டம் இடது பக்கம் அதாவது பின் பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் உண்டாகும்.

பிருஷ்டம் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.

கபாலத்தை இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும்.

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். அதாவது நீங்கள் செய்ய கூடிய பணிகளுக்கு சிறந்த பாராட்டு, புகழ் கிடைக்கும்.

காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

காது வலது பக்கம் பல்லி விழுந்தால் உங்கள் ஆயுள் கூடும்.

மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.

மார்பின்  வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும்.

வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்