பண வரவு அதிகரிக்க பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் இதை பாருங்கள் போதும்..!

panam adhikarika in tamil

பணம் அதிகரிக்க

பொதுவாக அனைவருக்கும் பணத்தின் தேவைகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அத்தகைய பண தேவைக்காக தினமும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விழாக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு பணத்தின் தேவை அதிகாமாக இருக்கும். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். பண வரவு அதிகரிக்க மற்றும் பண அதிர்ஷ்டம் பெருக பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் மறக்காமல் மூன்றை மட்டும் பார்த்தால் போதும் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பண வரவு கிடைக்கும். இந்த பதிவானது தீராத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கும் மற்றும் பண வரவு அதிகரிக்கவே இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கும் மிகவும் உதவினதாக இருக்கும்.

பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டியவை:

பணம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

நீங்கள் போகிப் பண்டிகை இரவு அன்று 7 கிண்ணங்கள் வைக்கும் அளவிற்கு பெரிய தாம்பூலம் தட்டினை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு துவரம் பருப்பு, கல் உப்பு, மாதுளை பழம், பச்சை அரிசி, கோதுமை, இனிப்பு வகை மற்றும் 9 சில்லறை காசு ஆகியவற்றை தனித்தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் மஹாலக்ஷ்மி மற்றும் குபேரருக்கு உகந்த பொருளாக இருக்கிறது. அதனால் இந்த அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு அதனை ஒவ்வொரு கிண்ணத்திலும் நிரப்பி தாம்பூலம் தட்டில் வைத்து விடுங்கள். 

அடுத்து ஒரு மிதமான அளவில் உள்ள வட்ட வடிவிலான புதிய கண்ணாடியை எடுத்துக்கொண்டு அதையும் அந்த தாம்பூலம் தட்டின் நடுவில் வைத்து விடுங்கள். அதன் பிறகு வெள்ளை நிற பூக்கள் அல்லது தாமரை பூக்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தாம்பூல தட்டின் நடுவே வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் தாம்பூலம் தட்டில் அனைத்து பொருட்களும் வைத்து தயார் செய்த பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு தங்கத்தால் ஆன நகையை பூக்கள் வைத்து இருப்பதின் நடுவே வைத்து இந்த தாம்பூல தட்டை உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் கண்களுக்கு தெரியும் படி வைத்து விட்டு தூங்கி விடுங்கள்.

பொங்கலன்று காலையில் எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் இந்த தாம்பூல தட்டில் இருக்கும் பொருட்களை தனித்தனியாக பொறுமையாக 2 நிமிடம் பார்த்து விட்டு கடைசியாக அந்த தட்டில் இருக்கும் கண்ணாடியை கையில் எடுத்து உங்களுடைய முகத்தை பாருங்கள்.

இது மாதிரி செய்து விட்டு அதன் பிறகு வழக்கம் போல் உங்களுடைய வேலையை செய்தால் போதும் 3 மாதத்திற்குள் பண கஷ்டங்கள் மற்றும் தீராத கடன் தொல்லை ஆகியவை நீங்கி பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்