நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

நாம் நல்ல காரியம் எதை செய்ய சென்றாலும் முதலில் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்ய புறப்படும் காரியம் வெற்றியைக் கொடுக்குமா அல்லது தோல்வியை கொடுக்குமா என்பதை பற்றி நாம் சகுனம் (sagunam tamil) மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.

மேஷ ராசி குணம் – Mesha rasi character in tamil..!

 

அந்த வகையில் நல்ல சகுனம் மற்றும் கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க…

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

நல்ல சகுனம் என்றால் என்ன:-

சுமங்கலிப்பெண், கன்னிப்பெண், சங்குநாதம், மங்கலவாத்தியம், சுபக் கூட்டம், நிறை குடம், தாசி, வேத ஓசை, மணமக்கள், அட்சதை, கட்டுச்சோறு, இரட்டை சலவைத்தொழிலாளி, இரண்டு பூரண கும்பங்கள், பூக்கள், பழங்கள், அரசன், நெருப்பு, பறவைக்கூட்டம், பிரேதம், குதிரை, யானை, காளை, மாமிசம், முத்து, தயிர், நெய், கள், பொறி, தேன், குடை, சாமரை, கொடி, கரும்பு, கழுதை, நாய், மூஞ்செலிசத்தம், ஆந்தை கிளைக் கூட்டல், கழுதை, இவை தென்பட்டால் நல்ல சகுனங்கள் (sagunam tamil) என்று சொல்வார்கள்.

ஒரு காரியத்திற்கு செல்லும்போது கழுகு, கருடன், கீரி, உடும்பு, குரங்கு, நாய், ஆந்தை, அணில் இவைகள் வலமிருந்து இடமாக போனால் நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.

நரி, கிளி, காகம், மயில், கொக்கு, ஓனான், கோழி, மான் இவைகள் இடமிருந்து வலமாக போனால் நல்ல சகுனம்.

ஆனால் எந்த பக்கத்தில் இருந்தும் பாம்பு (pambu sagunam in tamil), பூனை, பன்றி, முயல், ஆகியன குறுக்கே தென்படக் கூடாது.

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

கெட்ட சகுனம் என்றால் என்ன / ketta sagunam in tamil:-

விதவை, மாதவிலக்கான பெண், எண்ணெய் தலை, அவிழ்ந்த தலை, மொட்டைத்தலை, பைத்தியக்காரன், சடைமுடியுள்ள ஆண், நொண்டி, குருடர், நோயாளி, வைத்தியன், வாணிகன், தட்டான், குயவன், சன்னியாசி, ஒற்றை பிராமணன், மூன்று கோமூட்டிகள், விறகு கட்டு, ஈர வேஷ்டி, வெற்றுக்குடம், உப்பு, அரிவாள், கோடாரி, கடப்பாரை, ஆகியன எதிரில் தென்பட்டால் கெட்ட சகுனம் (sagunam tamil) என்று கொள்வார்கள்.

மழைபெய்தல், இடி இடித்தல், தூரல் போடுதல், தும்மல் போடுதல், ஓங்காரமிடல், சண்டை போடுதல், கொக்கரித்தல், பன்றி உறுமுதல், பூனை கத்துதல், தலைதட்டுதல், துணி அவிழ்தல், போகாதே என்பது, இடறிவிழுதல், சாப்பிட்டுபோ என்பது, எங்கே போகிறாய் என்பது, கூட வருகின்றேன் என்பது, கெட்ட சகுனம் (sagunam tamil) என்று சொல்வார்கள்.

கணபதி ஹோமம் பலன்கள்..! (Ganapathi Homam In Tamil)
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal