30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சனிபகவான் நன்மையை அளிக்கிறார் அதற்கு என்ன காரணம் தெரியுமா?

sani bhagavan palangal in tamil

சனி பகவான் யாருக்கு நன்மை செய்வார்?

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் சனி பகவான் யாருக்கு நன்மைகள் செய்வார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றால் ஒரு வாட்டுவட்டி எடுத்துவிடுவார் அதனால் சனி பகவான் என்றாலே ஒரு பயம் தான். ஆனால் சனி பகவான் அவர் அனைவருக்கும் கஷ்டங்களை தரமாட்டார் நியாயத்திற்கு பெயர்போனவர் அவர் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் கஷ்டங்களை தருவார். அதேபோல் நன்மையையும் அளிப்பார். சரி வாங்க யாருக்கு நன்மையை அளிப்பார் என்று தெரிந்துகொள்வோம்..!

சனி பகவான் யாருக்கு நன்மை செய்வார்:

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சனிப்பெயர்ச்சி நடக்கும். அதேபோல் கடந்த வருடம்  சனி பெயர்ச்சி நடந்த நிலையில் இந்த வருடமும் நடக்க உள்ளது அதில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சனி பகவான் நன்மையை அளிக்க உள்ளார். பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் பெயர்ச்சி ஆகிறார் என்றால் அந்த ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் மறுமுறை வருவாராம். அதனால் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுப்பாராம்.

2023 ஆம் ஆண்டு அடுத்த சனிப்பெயர்ச்சி யாருக்கு? சனிபெயர்ச்சியிலிருந்து விடுபடுபவர் ராசி எது ?

♣  அந்த வகையில் எந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்றால் கும்ப ராசிக்கு தான் பெயர்ச்சி ஆகிறார். அதேபோல் அந்த ராசிக்காரர் 30 வயதை அடைந்தார் என்றால் அவர்களுக்கு சனி பகவான் நன்மையை அளிப்பார்கள்.

♣  இந்த கும்ப ராசிக்காரர்களுக்கு 30 வருடத்திற்கு முன் சனிப்பெயச்சி நடந்திருக்கும் அதனால் மறுமுறை இந்த ராசிக்கு பெயர்ச்சி அவர்களுக்கு பெரியளவில் கஷ்டங்களை அளிக்கமாட்டார் என்பதை ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சனி பகவான் தாக்கம் அதிகமாக இல்லாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சனிபெயர்ச்சி நடக்கும் ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் , கருப்பு நிற மாடு, கருப்பு நிற நாய்கள் அல்லது கருநிற பறவைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உணவை கொடுக்க வேண்டும்.

♣  இதனை செய்வதால் சனிபகவானின் தாக்கம் அதிகம் இல்லாமலும், வேலைகளிலும் தடை இல்லாமல் இருக்கும்.

♣  வாரம் தோறும் சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு எண்ணெய் குளியல் செய்வது அவசியம்.

♣  வீட்டில் பூஜை செய்பவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதற்கு உங்களால் முடிந்த அளவுக்கு கோவில்களுக்கு உணவுகளை அன்னதானம் செய்யலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்