வார ராசி பலன்கள் 2023 | Vara Rasi Palan 2023 | Weekly Rasi Palan 2023 in Tamil
Vara Rasi Palan 2023: ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. இதில் உள்ள ராசிகள் அனைத்திற்கும் பலன்கள் என்பது அத்தகைய நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் தான் அமைகிறது. ஆகையால் இதுபோன்ற பலன்களை எந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் உள்ளது என்றும் தெரிந்துக்கொண்டால் அதற்கு ஏற்ற மாதிரி எச்சரிக்கையாக இருக்கலாம. அந்த வகையில் இன்றைய பொதுநலம். காம் பதிவில் வார ராசிபலன் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் 12 ராசிகளின் பலன்கள் என்னவென்று விரிவாக பதிவை படித்து பார்க்கலாம்.
மேஷ ராசி இந்த வார ராசிபலன்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாகவே காணப்படும். இந்த வாரம் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் உதவியினால் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும், சக பணியாளர்களின் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிடிலும் போதிய அளவில் இருக்கும்.
ரிஷப ராசி இந்த வார ராசிபலன்:
ரிஷப ராசிக்கார்களுக்கு இந்த வாரம் சிறப்பான இருக்கும். இந்த வாரம் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவிற்கு வாய்ப்புள்ளது. மேலும், இந்த வாரத்தில் திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக அடைக்க முடியாமல் இருக்கும் பணத்தை இந்த வாரத்தில் அடைப்பதற்காக வாய்ப்பு வரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மேலும், ஒரு சிலருக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எந்தவொரு முடிவையும் இப்போது எடுக்க வேண்டாம்.
மிதுன ராசி இந்த வார ராசிபலன்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனை இடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் எதிர்பாராத பண வரவு ஏற்படக்கூடும். அலுலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மேலும், பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.
கடக ராசி இந்த வார பலன்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக காணப்படும். இந்த வாரம் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். மேலும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் தொடங்கலாம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபரத்தை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசி இந்த வார ராசிபலன்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக அமையும். இந்த வாரத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், எதிர்பாராத அளவிற்கு பணவரவும் கிடைக்கும். முக்கியமாக, இந்த வாரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது, அமைதியான முறையில் பேசுவது நல்லது. அலுவலகத்தில் சக பாண்டியர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது மிகவம் அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும், கடினமாக உழைப்பதன் மூலம் வியாபாரம் நன்றாக நடக்கும்.
கன்னி ராசி இந்த வார ராசிபலன்:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஒரு சில ர் கடன் வாங்கவும் நேரிடலாம். மேலும், குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமையினால் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தை பொறுத்தவரை வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்
உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது |
துலாம் ராசி இந்த வார ராசிபலன்:
இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையும். இந்த பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. இந்த வாரத்தில் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததைவிட லாபம் கூடுதலாகஇருக்கும் .
விருச்சிகம் ராசி இந்த வார ராசிபலன்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அசிறப்பான வாரமாக அமையும். இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மேலும், வாழ்க்கை துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்.அலுவகத்தில் அதிக பணிச்சுமை இருப்பதால் அனைத்தையும் கவனமுடன் பணியாற்றுதல் வேண்டும். மேலும், சக பாண்டியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடினமாக உழைப்பதன் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும்.
இந்த வார தனுசு ராசி பலன் பலன்கள்:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலத்தில் மகிழ்ச்சியை சூழ்நிலை நிலவும். மேலும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது.
மகரம் இந்த வார ராசி பலன்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக அமையும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதனை சமாளித்து விடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும். மேலும், அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை இப்போது தவிர்க்க வேண்டும்.
கும்ப ராசி இந்த வார ராசி பலன்:
இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமூகமான வாரமாக அமையும். இந்த வாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரத்தில தொடங்கலாம்.
மீன ராசி இந்த வார ராசி பலன்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரம். இந்த வாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ளவர்களுக்கு சாதகமான சாதகமான முடிவு வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகலும் கிடைக்கும். மேலும், வியாபாரத்தை விரிவுபடுத்த இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |