வீடு கட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன் | Veedu Kattuvathu Pol Kanavu Palan..!
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய வீட்டில் நிறைய முறைகள் இருப்பதால் ஒவ்வொருவரும் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வீட்டினை காடி வாழ்கிறார்கள். அதிலும் பெரும்பாலான நபர்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவது என்பது ஒரு லட்சியமாக இருந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் சிலருக்கு இத்தகைய வீட்டினை பற்றி யோசித்து கொண்டு தூங்க சென்றால் வீடு சம்மந்தப்பட்ட கனவுகள் வரும். அதாவது வீடு கட்டுவது, குடி போகுவது, வீடு இல்லாமல் அலைந்து தேடுவது போன்ற கனவுகள் வரும். அந்த வகையில் பார்த்தோம் என்றால் இப்படி வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. எனவே இன்று வீடு கட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வீடு கட்டுவது போல் கனவு கண்டால்:
வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை மற்றும் லட்சியம் மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும். அத்தகைய ஆசையானது கனவாக வரும் போது இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று நமக்குள் ஒரு யோசனை வரும். ஏனென்றல் ஒவ்வொருவ கனவிற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.
ஆகையால் வீடு கட்டுவது போல உங்களுக்கு கனவு வந்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரப்போகிறது என்றும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது.
இதுவே வீடு கட்டுவது போல கனவு வந்தால் அதற்கான பலன் ஆகும்.
கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா..
வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு உடல் ரீதியாக ஏதோ ஒரு நோய் பிரச்சனை வரப்போகிறது என்பது தான் இதற்கான அர்த்தமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
புதிய வீடு கனவில் வந்தால்:
அதுபோல நீங்கள் தூங்கும் போது புதிய வீடு கனவு வந்தால் ரொம்ப நாட்களாக நீங்கள் நினைத்தகாரியம் விரைவில் கைக்கூட போகிறது என்பது தான் இதற்கான அர்த்தம் ஆகும்.
வீடு வாங்குவது போல் கனவு கண்டால்:
வீடு வாங்குவது போல கனவு வந்தால் அது நன்மையினை குறிக்கும் அர்த்தமாக சொல்லப்படுகிறது. அதாவது புதிய வேலைவாய்ப்பு, பண வரவு அதிகரித்தல், உடல் நிலை சிறப்பாக இருத்தல் மற்றும் புதிய நண்பர்களின் உறவு கிடைத்தல் என எண்ணற்ற நன்மைகள் நடக்கப் போகிறது என்பதனை முன்கூட்டியே உணர்த்துகிறது.
பழைய வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்:
இரவில் தூக்கத்தில் பழைய வீட்டினை பார்ப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் புதிதாக குழப்பங்கள் ஏற்பட்டு துன்பம் நடக்கப்போகிறது என்பது தான் இதற்கான பலனை ஆகும்.
இதையும் படியுங்கள்⇒ வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |