ஆப்ரிகாட் பழம் பயன்கள்..! Apricot Benefits in Tamil..!

Apricot Benefits in Tamil

ஆப்ரிகாட் பழம் பயன்கள்..!

Apricot Benefits in Tamil:- உலர் பழங்கள் எப்போதும் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அந்த வகையில் ஆப்ரிக்காட் பழத்தை நிழலில் காயவைத்து அதன் நீர் சக்திகள் வெளியேறிய பின்பு காய்ந்த உலர் பழம் தான் இந்த ஆப்பிரிக்காட். உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை அளிக்ககூடிய ஆப்ரிகாட் பழம் பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம். ஆப்ரிகாட் பழத்தினை தமிழில் சர்க்கரை பாதாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த பழம் பார்ப்பதற்கு பொன்னிறமான நிறத்தையும், புளிப்பு சுவையையும் கொண்டிருக்கும். இந்த ஆப்ரிகாட் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி இந்த ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை (Apricot Benefits in Tamil) பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

ஆப்ரிகாட் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்:-

100 கிராம் ஆப்ரிகாட் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கலோரிகள் 53 கிராம், புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ச்சத்து 1.1 கிராம், மாவுச்சத்து 11.6 கிராம், கால்சியம் 0.20 கிராம், பாஸ்பரஸ் 0.25 கிராம், இரும்பு சத்து 2.2 கிராம், கரோட்டின் 2160 μg, தயமின் 0.04 மி.கி, நியாசின் 0.6 மி.கி, ரிபோஃபுளேவின் 0.13 மி.கி, அஸ்கார்பிக் அமிலம் 6 மி.கி, தாமிரம் 0.11 மி.கி, பொட்டாசியம் 480 மி.கி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்..! Apricot Benefits in Tamil..!

செரிமான பிரச்சனைக்கு:-

இந்த ஆப்ரிகாட் பழத்தில் செரிமான சக்தியை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆப்ரிகாட் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.

சப்போட்டா பழம் நன்மைகள்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு:-

உலர் ஆப்ரிகாட் பழங்களில் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.

மேலும் தொடர்ந்து ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்றுநோய் வருவதில்லை.

கிவி பழம் நன்மைகள்

காய்ச்சல் குணமாக:-

காய்ச்சல் உள்ளவர்கள் ஆப்ரிகாட் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும். தங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்துவிடும். இதனால் உடல் சோர்வடையாமல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அனிமியா என்கிற இரத்த சோகை குணமாகும்:-

anemia treatment

இரத்த சோகை நோயாளிகள் தினமும் இரண்டு ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடுவதினால் இரத்த சோகை பிரச்சனை குணமாகும். ஏனெனில் இவற்றில் இரத்த சிவப்பணுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய தாதுப்பொருட்களான இரும்பு மற்றும் செம்பு ஆகிய சத்துக்களை தன்னிடத்தில் கொண்டிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

கண் பார்வை திறனை அதிகரிக்கலாம்:-

கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் விட்டமின் ஏ சத்து இந்த பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் சம்மந்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் இந்த உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூற்றை கணிசமாகக் குறைக்கும்.

டிராகன் பழம் நன்மைகள்

குழந்தையின்மை பிரச்சனைக்கு அருமருந்து:-

pregnancy

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனை சரியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை குணப்படுத்துவதில் நல்ல வல்லமை வாய்ந்தது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, இனிப்புகள் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை உண்பதைக் காட்டிலும், உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்