முதுகு வலி சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த வலி ஒரு சிலருக்கு எப்போதாவது வந்தால் அது பிரச்சனை அல்ல ஆனால் ஒரு சிலருக்கு ஊட்காருவதில், படுப்பதில் மற்றும் நிமிரமுடியாத அளவிற்கு இருந்தால் அது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் தான். அந்த வகையில் நாம் இந்த பதிவில் முதுகு வலி எதனால் வருகிறது அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.
Back Pain Reasons in Tamil:
கீழ் முதுகு வலி இதனை லும்பகோ (Lumbago) என்றும் அழைப்பர். மற்ற நோய்களை போலவே கீழ் முதுவலியும் ஒரு விதமான நோயின் அறிகுறியே ஆகும்.
முதுகு வலி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது நாம் உட்காரும் தோரணை தான்.
உட்காரும் போது சரியான நிலையில் நம் முதுகு இல்லாததால் நம் முதுகு தண்டுவடத்திற்கு 40% அழுத்தத்தை கொடுப்பதால் தசைகள் சீக்கிரமாக தளர்வுற்று முதுகு வலி ஏற்பட காரணமாகிறது.
முதுகு வலி காரணங்கள்:
வயிற்றில் கோளாறு உள்ளவர்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.
Back Pain Reasons For Ladies in Tamil:
பெண்களுக்கு இருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்று கோளாறால் 10% முதுகு பிரச்சனை இருந்தாலும், 91% முதுகெலும்பில் பிரச்சனை இருக்கும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது, அதிக எடையுள்ள பொருட்களை நெடுநேரம் சுமந்து கொண்டு செல்வது, உடல் எடை அதிகமாக இருப்பது, நெடு நேரம் பயணிப்பது, சரியான உணவை சாப்பிடாமல் இருப்பது, சிறுவயதில் விளையாடும்போது கீழே விழுந்திருந்தால், உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் முதுகு தண்டுவடத்தில் அழுத்தம் அதிகரித்து கீழ் முதுகு வலி ஏற்பட காரணமாகிறது.
ஆஸ்டியோமைலிட்டிஸ், ஸ்பாண்டிலிட்டிஸ் மற்றும் காச நோய் உள்ளவர்களுக்கு கீழ் முதுகு வலி வரும்.
சாலை விபத்து அல்லது தவறி கீழே விழுவதால் எலும்பு முறிந்து கூட இந்த வலி உண்டாகலாம்.
ஒரு சிலருக்கு ஏற்படும் தசைப்பிடிப்பு, தசை வலி, மன உளைச்சல், குறைவான நீர்ச்சத்து மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் குழந்தையை சுமப்பதனால் இந்த முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு சந்திக்கும் இடத்தில் இருக்கும் Sacroiliac எனும் மூட்டில் ஏதேனும் வீக்கம் அல்லது வேறு உபாதைகள் இருந்தால் இந்த வலி உருவாகும்.
வயதானவர்களுக்கு கண்டிப்பாக முதுகுவலி இருக்கும். அதற்கான காரணம் முதுகெலும்பில் நீர்ச்சத்து குறைந்து விடுவது மற்றும் எலும்பின் வளர்ச்சிக்கு முக்கியமான கால்சியத்தின் அளவு குறைந்து விடுவதால் கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும். எலும்பு வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அதற்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்று பெயர்.
முதுகு வலிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இடைவெட்டு விலகுவது மற்றும் முதுகு முள்ளெலும்புகளின் பின் பக்கத்தில் உள்ள அசையும் மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுவதே ஆகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>