பேரிச்சம் பழம் நன்மைகள் | Dates Benefits in Tamil

Dates Benefits in Tamil

பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் | Pericham Palam Benefits in Tamil

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பேரிச்சை பழம். உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவு பொருள்களையெல்லாம் தான் நாம் தினமும் சாப்பிட்டு வருகிறோம். தினமும் பேரிச்சை பழத்தினை சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமையுடன் இருக்கும். ஏனென்றால் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இரத்தசோகை இருப்பவர்கள் இதனை தாராளமாய் உண்ணலாம். உடலில் இரத்தம் அதிகரித்து நல்ல ஆற்றலுடன் இருப்பீர்கள். இந்த பதிவில் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

லோங்கன் பழத்தின் நன்மைகள்

எலும்பு பலம் பெற உணவுகள்:

எலும்பு பலம் பெற உணவுகள்

பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகமாக பேரிச்சம் பழத்தில் உள்ளது. பேரிச்சை மனிதர்களின் உடல் எலும்புகளின் தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி பழம் மருத்துவ குணங்கள்

உடலில் ரத்தம் அதிகரிக்க:

உடலில் ரத்தம் அதிகரிக்க

பழ வகைகளில் அதிகமாக இரும்புச்சத்து நிறைந்துள்ள பழமானது பேரிச்சை பழம் தான். சிலருக்கு உடலில் இரத்த அளவானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இரத்த சோகை ஏற்பட்டு அவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள். இதற்கு பேரிச்சை சாப்பிட்டு வர இரத்த சோகையை சரிசெய்யலாம். உடலில் இரத்தத்தினை அளவினை அதிகரித்து இரத்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றல் பேரிச்சை பழத்திற்கு உண்டு.

கண் பார்வை அதிகரிக்க:

கண் பார்வை அதிகரிக்க

உடல் உறுப்புகளில் நாம் அதிகமாக எந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் கண்களுக்கு தான். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் கண்பார்வை திறனானது மங்கலாக இல்லாமல் தெளிவாக தெரிந்தால் தான் எந்த ஒரு இடத்திற்கும் செல்ல, படிக்க கண் பார்வையானது அவசியம். இன்றைய காலத்தில் கண் பார்வை குறைபாடு அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு காரணம் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் தான். இதனால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் அதிகரிக்கும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

டிராகன் பழம் நன்மைகள்

இதயம் பலம் பெற:

இதயம் பலம் பெற

இதய சம்பந்த நோயால் இப்போது பலரும் பாதிப்பு அடைகிறார்கள். அதிக மன அழுத்தம், கவலை, டென்ஷன் இது மாதிரியான செயல்களால் இதயம் பெரும்பாலானோருக்கு பாதிப்படைகிறது. பேரிச்சை பழத்தில் இதயத்தை பாதுகாக்கக்கூடிய பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் கெட்ட கொழுப்பினை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தடுத்து நிறுத்துகிறது. இதய சம்பந்த பிரச்சனைக்கு பேரிச்சை மிகவும் நல்லது.

ஆண்மை அதிகரிக்க:

ஆண்மை அதிகரிக்க

ஆண்கள் சிலருக்கு நரம்பு தளர்ச்சியால் பாதிப்படைந்து இருந்தால் அவர்களுக்கு  தாம்பத்திய உறவில் அந்த அளவிற்கு ஆர்வம் இருக்காது. மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது. ஆண்மை குறைபாடு நீங்க தினமும் காலை மற்றும் இரவு இரண்டு வேளைகளிலும் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பால் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil