கோடை ஸ்பெஷல் இளநீர் மருத்துவ பயன்கள் | Elaneer Benefits in Tamil

Elaneer Benefits in Tamil

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Elaneer Nanmaigal in Tamil

கோடை காலத்தில் மக்கள் அதிகமாக நீர்ச்சத்துள்ள பானங்களை எடுத்து கொள்வது வழக்கம். அப்படி அருந்தப்படும் பானங்களில் இளநீரும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் மரம் தென்னை. தேங்காய் காயாக இருக்கும் நிலையை தான் நாம் இளநீர் என்கிறோம். இந்த இளநீரை குடித்தால் உடல் உஷ்ணம் தணியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த இளநீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன, நாம் இந்த பதிவில் இளநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சத்துக்கள்:

 • வைட்டமின் எ, பி, சி
 • சோடியம்
 • பொட்டாசியம்
 • கால்சியம்
 • மெக்னீசியம்
 • இரும்பு சத்து
 • தயமின்
 • ரிபோஃபிளாவின்
 • நியாசின்
 • நார்ச்சத்து
 • கனிமச்சத்து
 • நீர்சத்து

நீர் சத்து அதிகரிப்பதற்கு:

ilaneer uses in tamil

 • Elaneer Uses in Tamil: கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் தாக்குதலால் உடல் வறட்சி, சோர்வு, களைப்பு ஏற்படும். உடல் வறட்சியை தடுத்து தேகத்தில் நீர்சத்து அதிகரிப்பதற்கு இளநீர் உதவியாக இருக்கும், மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

இரத்த அழுத்தம்:

இளநீர் பயன்கள்

 • Elaneer Benefits in Tamil: இரத்த குழாய்கள் சுருங்கி இருந்தால் அல்லது அடைப்புகள் இருக்கும் காரணத்தால் இரத்த அழுத்தம் ஏற்படும், அதனை குணப்படுத்த இந்த இளநீர் உதவுகிறது.
 • 100 Ml இளநீரில் 250 Mg பொட்டாசியம், 105 Mg சோடியம் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இரத்த உற்பத்தியை சீராக வைத்து கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது.

மன அழுத்தம் நீங்க:

elaneer nanmaigal in tamil

 • Elaneer Nanmaigal in Tamil: இப்போது இருக்கும் வேலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
 • இளநீரை குடிப்பதால் நம் உடலில் இருக்கும் Cortisol எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்தி மன அழுத்தம், கவலை, எரிச்சல் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

சிறுநீரக கற்கள்:

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 • Elaneer Benefits in Tamil: நம்முடைய உணவு முறை மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் குளோரின் சிறுநீரகங்களில் தங்கி சிறுநீரக கற்கள் உருவாகிறது. இத்தகைய சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் இருக்க இளநீர் குடிப்பது அவசியம் ஆகும். மேலும் சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

வயிற்று வலி நீங்க:

இளநீரின் மருத்துவ பயன்கள்

 • Elaneer Nanmaigal in Tamil: உடல் உஷ்ணம் அதிகரிக்கும் காரணத்தால் வயிற்று வலி, வயிற்று எரிச்சல், வயிறு உப்புசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இளநீர் குடித்தால் உடல் உஷ்ணம் நீங்கி வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
 • மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்யவும் உதவியாக இருக்கும்.
தர்பூசணியின் பயன்கள் உச்சி முதல் பாதம் வரை

நோய் எதிர்ப்பு சக்தி:

elaneer benefits in tamil

 • Elaneer Benefits in Tamil: உடலில் எந்த விதமான நோயும் தாக்கப்படாமல் இருப்பதற்கு தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியது அவசியம்.
 • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான தயமின், ரிபோஃபிளாவின், நியாசின் இளநீரில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு:

elaneer benefits during pregnancy in tamil

 • Elaneer Benefits During Pregnancy in Tamil: கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பசியின்மை, வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்படும். இதை சரி செய்வதற்கு இளநீர் குடிப்பது நல்லது. இது வாந்தி, மயக்கத்தை சரி செய்வதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும், ஆற்றலையும் கொடுக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கும் இந்த இளநீர் உதவியாக இருக்கும்.

சரும பிரச்சனைகள்:

ilaneer uses in tamil

 • Ilaneer Uses in Tamil: கோடை காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் சரும வறட்சி, எரிச்சல், பருக்கள், கருவளையம் ஏற்படும். அதனை சரி செய்ய தினமும் இளநீர் குடிப்பது அவசியம். இளநீரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆன்டி ஏஜென்ட்டுகள் சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு:

ilaneer uses in tamil

 • Ilaneer Uses in Tamil: எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் எலும்பு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. மேலும் பற்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்