புட் பாய்சன் (Food Poison) குணமாக சிறந்த கை வைத்தியம்..!

Food Poison treatment tamil

Food Poison Home Remedy in Tamil

Food poison treatment tamil:-

Food poisoning tamil maruthuvam – சில நேரங்களில் நாம் உண்ணும் உணவே விஷமாக மாறி நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வாந்தி என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளான நெய், எண்ணெய் பலகாரங்கள், எளிதில் செரிமானம் ஆகாத சில உணவுகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் பாஸ்டு புட் ஆகிய உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாமல் புட் பாய்சனாக மாறி வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இதற்காக மருத்துவரை நாடி 500, 1000 என்று பணம் செலவழிப்பதற்கு பதிலாக நம் வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து இந்த ஃபுட் பாய்சன் பிரச்சனையை எப்படி குணப்படுத்தலாம் (food poisoning tamil maruthuvam) என்று இந்த பக்கத்தில் நாம் காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

Food poison treatment tamil..!

புட் பாய்சன் குணமாக – இஞ்சி:

Food poison home remedy in tamil – எளிதில் ஜீரணம் ஆகும் சக்தி இஞ்சிக்கு உள்ளதால் பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து கொள்ளவும், அவற்றை அம்மியில் நன்றாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

தண்ணீர் கொதிக்கும் போது தட்டி வைத்திருக்கும் இஞ்சியை அவற்றில் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து, பின்பு இந்த நீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

புட் பாய்சன் குணமாக – சீரகம் நீர்:

Food poison home remedy in tamil – சீரகமும் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால், ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, அவற்றில் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் இந்த பிரச்சனை சரியாகும். மேலும் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை இந்த சீரக நீருக்கு உள்ளது.

புட் பாய்சன் குணமாக – துளசி:

Food poison home remedy in tamil – துளசி பொதுவாக ஒரு மருத்துவ குணம் வாய்ந்தது. சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் இலையும் கூட. துளசி தினமும் சாப்பிட்டால் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. செரிமான பிரச்சனைக்கும் தீர்வாகிறது.

எனவே துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து, பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் புட் பாய்சன் (food poison home remedy in tamil) பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபெறலாம்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

ஃபுட் பாய்சன் குணமாக – லெமன் டீ மற்றும் புதினா டீ:

Food poison home remedy in tamil – பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு லெமன் டீ அல்லது புதினா டீ ஒரு டம்ளர் அருந்தி வர எளிதில் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

புட் பாய்சன் குணமாக – பழசாறு:

Food poison home remedy in tamil – செரிமான பிரச்சனைகள் ஏற்படும்போது வாழைப்பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் என்று அருந்தி வந்தால் எளிதில் செரிமான பிரச்சனை சரியாகும்.

புட் பாய்சன் குணமாக – தேன்:

Food poison home remedy in tamil – அஜீரண பிரச்சனைக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே தினமும் மூன்று வேளை என்று ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனை சரியாகும்.

ஃபுட் பாய்சன் குணமாக – தண்ணீர்:

Food poison home remedy in tamil – புட் பாய்சன் ஏற்படும்போது உடலில் உள்ள நீர் சத்து குறைந்து, சோர்வடைந்து காணப்படுவோம்.

எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகளவு குடித்தாலே செரிமான பிரச்சனை சரியாகும். இவை எல்லாம் புட் பாய்சன் குணமாக சிறந்த மருந்து.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்