கற்றாழை மருத்துவ பயன்கள் | Katralai Benefits in Tamil

katralai benefits in tamil

கற்றாழை பயன்கள் | Sotru Katralai Benefits in Tamil

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு செடிகளும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் கற்றாழையில் உள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம். இந்த செடி ஒரு அழியாத தாவரமாகும் (Plant Of Immortality). இந்த தாவரம் மண் இல்லாத சூழ்நிலையிலும் வளர முடியும். கற்றாழை அதிக அளவில் அழகு குறிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த செடி சில மருத்துவ நலன்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதை பற்றிய தகவல்களை கீழே விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கற்றாழை மருத்துவ பயன்கள்:

 • கற்றாழையில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி அதிக அளவு மருத்துவ குணமுடையது. தோல்களில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற தோல் நோய்களுக்கு இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இதில் 75-ற்கும் மேற்பட்ட சத்துக்களான விட்டமின்ஸ், மினரல்ஸ், Enzymes மற்றும் Anti Agents உள்ளது.

சோற்றுக் கற்றாழை

 • இதில் Anti Fungal மற்றும் Anti Bacterial இருப்பதால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புண்களை சீக்கிரம் சரி செய்யவும் உதவுகிறது. வயது முதிர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.

Katralai Benefits in Tamil – மலச்சிக்கலை குணப்படுத்த:

சோற்றுக் கற்றாழை

 • செரிமான கோளாறு உள்ளவர்கள் இதனை காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் அளவு வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடலாம். ஜூஸ் ஆகவோ அல்லது ஜெல்லாகவோ சாப்பிடலாம். மலச்சிக்கலுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும்.
 • இது கல்லீரல், சிறுநீரகம், உடம்பில் உள்ள அமிலத் தன்மை ஆகியவற்றை சரி செய்யவும் உதவுகிறது.

பல் உறுதியாக – கற்றாழை:

கற்றாழை பயன்கள்

 • கற்றாழை சாறு அல்லது கற்றாழை எண்ணெயை உடம்பில் தடவுவதால் கோடை காலங்களில் ஏற்படும் சரும நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
 • கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு மென்று வர பல் ஈறுகள் உறுதியடையவும் மற்றும் பற்சொத்தை வராமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்கவும் உதவுகிறது.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க – கற்றாழை:

கற்றாழை

 

 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த கற்றாழையை சாப்பிடலாம்.
 • உடலில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் மற்றும் சைட்டோபினின் போன்ற வேதிப்பொருள்களை அதிகரிக்க செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
துளசியின் மருத்துவ குணங்கள்

கற்றாழை பயன்கள் – சர்க்கரை நோயை குணப்படுத்த:

katralai benefits in tamil

 • தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸாக செய்து அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் வெப்ப காலங்களில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் உடம்பில் சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது இந்த கற்றாழை சாறு.

Katralai Benefits in Tamil – புற்றுநோயை குணப்படுத்த:

கற்றாழை மருத்துவ பயன்கள்

 • புற்றுநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இது புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் தடுப்பதற்கும் மேலும் புற்றுநோய்களை சரி செய்யவும் உதவுகிறது.

கற்றாழை தினமும் சாப்பிடலாமா?

 • கற்றாழையின் மேற்புறம் மற்றும் அடிப்புறத்திற்கு நடுவில் இருக்கும் பகுதியை சாப்பிட கூடாது, அதை சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எதையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிட கூடாது.
 • கற்றாழையை சாப்பிடுவதை விட அதனை சருமத்தின் மேல்புறத்திற்கு பயன்படுத்துவது நல்லது, அதன் மூலமே நிறைய நல்ல பலன்களை பெறலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil