வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

ஹலோ நண்பர்களே. இன்று ஆரோக்கியம் பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். இன்று நாம் வவ்வால் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

வவ்வால் மீன்கள்:

வவ்வால் மீன்கள்

“வவ்வால் மீன் பெர்சிஃபார்ம் எனப்படும் மீன்களின் பிராமிடே குடும்பத்தை சேர்ந்தது”. இந்த வவ்வால் மீன் குடும்பத்தில் சுமார் 20 வகையான மீன்கள் உள்ளன. இந்த வவ்வால் மீன்களை ஆங்கிலத்தில் பாம்ஃப்ரெட் (Pomfret) என்று கூறுகின்றனர். இந்த மீன்களை தமிழில் வவ்வால் மீன் அல்லது வவல் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வவ்வால் மீன்கள் நீரில் இருக்கும் போது வெள்ளை நிறமாகவும் வலையில் பிடித்தவுடன் கருப்பு நிறமாகவும் இருக்கும். நம் இந்திய நீர்நிலைகளில் 3 வகையான வவ்வால் மீன்கள் காணப்படுகின்றன.

 1. பிளாக் பாம்ஃப்ரெட் (கறுப்பு நிறம்).
 2. கிரே பாம்ஃப்ரெட் (சாம்பல் நிறம்).
 3. சில்வர் பாம்ஃப்ரெட் (வெள்ளை நிறம்).
ஜிலேபி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வவ்வால் மீன் பயன்கள்:

வவ்வால் மீன் சாப்பிடுவதால் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அதாவது, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் அதிகம் கொண்ட மீனாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு மிதமான அளவில் மீன்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த வவ்வால் மீன்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் B12 வைட்டமின்கள் அதிகம் உள்ளன. பொதுவாக வவ்வால் மீன் இறைச்சியில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும். ஆனால், இந்த மீனில் துத்தநாகம், பாஸ்பரஸ், சோடியம், செலினியம், கால்சியம் போன்ற தேவையான தாதுக்கள் உள்ளன. இது இதயம், மூளை, தசை போன்றவற்றுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? – சத்துள்ள மீன் வகைகள் இதோ

 

வவ்வால் மீன்களின் ஆரோக்கிய நன்மைகள்:

 • இதில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய செயல்திறனை அதிகரிக்கிறது.
 • இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. இரத்த அழுத்தத்தையும் குறைகிறது.
 • இந்த மீன் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கிறது. இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்பு போன்றவற்றிற்கு சிறந்த உணவாகும்.
 • இந்த மீன் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாகவும் அதிக நோய்எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
 • இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது வளர்ச்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்கிறது.
 • மன அழுத்தத்தை குறைக்கிறது. அதுமட்டுமின்றி ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
 • இது ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்துகிறது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
விரால் மீன் நன்மைகள்
 • குழந்தைகள் இந்த மீனை சாப்பிடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது.
 • பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கிறது.
 • இதில் கொழுப்பு அமிலமான ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் இது மூளை செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நரம்புகளின் வீக்கத்தை குறைக்கிறது.
 • இது மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கிறது. காரணம், இந்த மீன் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் கொண்டது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil