தினமும் ரசம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Rasam Health Benefits in Tamil

Rasam Health Benefits in Tamil

நண்பர்களே வணக்கம்.. சிலர் வீட்டில் ரசம் தினமும் தங்களது டயட் உணவில் எடுத்துக்கொள்வார்கள். சிலர் வீட்டில் ரசம் என்பதை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து சாப்பிடுவார்கள். ரசத்தில் புளிரசம், மிளகு ரசம், வெங்காய ரசம், கொத்தமல்லி ரசம், தக்காளி ரசம் என்று நிறைய வகைகள் உள்ளது. ரசம் எத்தனை வகை இருந்தாலும் பெரும்பாலானோர் வீட்டில் தக்காளி ரசத்தை தான் செய்வார்கள். சரி இந்த பதிவில் தினமும் ரசம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். உண்மையில் தினமும் ரசத்தை நமது உணவில் சேர்த்துக்கொள்வதினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்ன நன்மை என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் என்னென்ன என்றால் புளி, மிளகு, சீரகம், மஞ்சள், பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் மற்றும் உப்பு இந்த பொருட்கள் தான் சேர்க்கப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் தினமும் ரசம் சாப்பிடுவதினால் பலவகையான உடல் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் கட்டுப்படுத்த முடியும் அது என்னென்ன பிரச்சனை என்று இப்பொழுது நாம்  தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

ரசம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:Rasam

தினமும் உணவில் ரசம் சேர்த்துக்கொள்வதினால் செரிமானத்தை சிறக்கவும், செரிமான பிரச்சனையையே மேம்படுத்தவும் உதவுகிறது.

உடலில் சர்க்கரை அளவை நிலையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கிட்னியில் கல் உருவாகாமல் இருப்பதற்கான பணிகளை செய்கிறது.

வயிற்றில் ஏதாவது சிறிய அளவில் இன்பெக்சன் இருந்தால் அதனை சரி செய்யவும் ரசம் உதவி செய்யும்.

ரசத்தில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் நம்மை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ளும். கேன்சர் வருவதற்கான செல்களையும் அளிக்குமாம்.

ரசத்தில் Anti Inflammatory Properties இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனை வரும் போது இந்த ரசத்தை மட்டும் மூன்று வேளை வைத்து சாப்பிட்டால் அந்த ஆரோக்கிய பிரச்சனை சரி ஆகிவிடும்.

ரசம் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலிய பிரச்சனைகள் உடனே சரியாகிவிடும்.

ரசத்தில் சேர்க்கப்படும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை வயிற்றுக்கு உறுதி தருகிறது. இது மட்டும் இல்லாமல் வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரை நெல்லிக்காய் நன்மைகள்..! எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips