யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..! Uric Acid Treatment in Tamil..!

uric acid treatment in tamil

யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..! 

Uric Acid Treatment in Tamil/ யூரிக் ஆசிட் சித்த மருத்துவம்:- பொதுவாக நமது உடலில் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் மீதமுள்ள அமிலம் இரத்தத்தில் கலந்துவிடும். பொதுவாக ஒரு டெசி லிட்டர் இரத்தம் யூரிக் அமிலம் பெண்களுக்காக இருந்தால் 6 மிகி வரையிலும், ஆண்களாக இருந்தால் 7 மிகி வரை இருந்தால் அது இயல்பான நிலையாகும்.

இதன் அளவு அதிகரிக்கும் போதுதான் உடலில் பிரச்சனைகள் அதிகமாகிறது. சரி உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் உடலில் வீக்கம் அதிகம் உள்ள இடங்களில் யூரிக் அமிலம் படிந்து வலியை ஏற்படுத்தும். அதாவது கால் வலி, கை வலி, அடிவயிற்று வலி, மூட்டு வலி போன்ற வலிகளை ஏற்படுத்தும்.

இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய், சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை ஆண்கள் தான் அதிகமாக சந்திக்கின்றன, பெண்களுக்கு இந்த பிரச்சனை மாதவிடாய் நின்ற பின்பே ஏற்படுகிறது.

எலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..!

யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் / Uric Acid In Tamil :-

உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க முக்கிய காரணம் மது அதிகமாக அருந்துவது, மரபணு காரணமாக, உடல் எடை அதிகமாக இருந்தால், கடுமையான உடல் பயிற்சி, வெயிலில் இருசக்கர வாகனத்தில் அதிகநேரம் செல்வது, கிட்னி கழுவுகளை வெளியேற்றும் சக்தியை இழப்பது, சிறுநீர் அதிகமாக வெளியேற கொடுக்கப்படும் மாத்திரைகள், தானிய உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவது போன்ற காரணங்களினால் இந்த யூரிக் அமிலம் அதிகரிக்கப்படுகிறது.

சரி இந்த யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக (Uric Acid Treatment in Tamil) என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

யூரிக் அமிலம் குறைப்பது எப்படி? Uric Acid Treatment in Tamil

1 மாட்டிறைச்சி போன்ற உணவுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2 கீரைகள் மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

3 யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக: அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். எனவே ப்ராக்கோலி, கீரை மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது எனவே இவற்றையெல்லாம் சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தை குறைக்கலாம்.

4 உணவில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் உடலில் அதிகளவு யூரிக் அமிலம் சுரப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.

5 செலரி விதையின் சாறு முதுகு வலி, இடுப்பு வலி, கை வலி, கால் வலி, வயிற்று வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. எனவே யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த செலரி விதையின் சாறினை பயன்படுத்தலாம்.

6 இனிப்பு கலந்த பேக்கரி உணவுகளில் யூரிக் அமிலம் அதிகளவு இருக்கும். எனவே பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

7 தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை சரியான இடைவேளையில் அருந்த வேண்டும். அதாவது தினமும் 2 1/2 லிட்டர் தண்ணீரை அருந்துங்கள் இவ்வாறு தண்ணீர் அருந்துவதால் கிட்னியில் தேங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.

8 தினமும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு நாளிற்கு 10 இருந்து 30 செர்ரி பழங்களை சரியான இடைவெளியில் சாப்பிடுவதினால் உடலில் யூரிக் அமிலம் அதிகளவு சுரப்பதை தவிர்க்கலாம்.

10 இந்த யூரிக் அமிலம் பிரச்சனைக்கு மிகவும் முக்கியமான காரணம் ஒழுங்கற்ற உணவு முறைதான் காரணம் என்று சொல்லலாம். சாதாரணமா 100 கிராம் கோழி ஈரலை சாப்பிட்டால் உடலில் 310 மில்லி கிராம் யூரிக் அமிலம் சுரக்கின்றது. அதே போல் 100 மில்லி ஆல்ஹகால் அருந்தினால் உடலில் 1810 மில்லி யூரிக் அமிலம் சுரக்கின்றது.

சரியான உணவு முறையை பின்பற்றினாலே நம் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான வாழ்க்கையைக்கு சரியான உணவு முறைகளே மிகவும் சிறந்தது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்