வேர்க்கடலை நன்மைகள் | Verkadalai Benefits in Tamil

Verkadalai Benefits in Tamil

நிலக்கடலை பயன்கள் | Nilakadalai Uses in Tamil

வேர்க்கடலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல விதமான சத்துக்கள் அடங்கியுள்ளது. வேர்க்கடலையில் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இந்த நிலக்கடலையானது உலகெங்கும் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. வேர்க்கடலை (verkadalai benefits in tamil) சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

கொண்டைக்கடலை பயன்கள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள:

 வேர்க்கடலை நன்மைகள்

verkadalai benefits in tamil: அதிக உடல் எடை இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்துடன் உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

குடல் புற்றுநோய் குணமாக:

 verkadalai benefits in tamil

வேர்க்கடலை நன்மைகள்: புற்றுநோய்களில் பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் தான் உலகெங்கும் அதிகமாக வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுத்து நிறுத்தும்.

வேர்க்கடலையில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்படமால் பாதுகாக்கிறது. வாரத்தில் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவுத்தான்.

செரிமான கோளாறை சரி செய்ய:

 நிலக்கடலை பயன்கள்

வேர்க்கடலையில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய செரிமான கோளாறு பிரச்சனையை சரி செய்கிறது. அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டு வரலாம்.

பாசி பயறு பயன்கள்

இதய சம்பந்தமான நோய்க்கு:

 nilakadalai uses in tamil

வேர்க்கடலை நன்மைகள்: இன்றைய காலத்தில் இதய சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இதயம் சார்ந்த மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வினை கொடுக்கும்.

அறிவாற்றல் அதிகரிக்க:

 peanuts benefits in tamil

verkadalai nanmaigal in tamil: ஒரு மனிதருடைய அனைத்து செயல்களுக்கும் முற்றுப்புள்ளியாக இருப்பது மூளை. தினமும் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஞாபக திறனும் அதிகரிக்கிறது. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் உடலில் இருந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை இல்லாமல் செல்வதற்கு  நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது.

கேன்சர் செல்களை அழிப்பதற்கு:

 nilakadalai uses in tamil

வேர்க்கடலையில் அதிகமாக ஆன்டி ஆக்சின்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனால் கேன்சர் செல்களை வளர விடாமல் ஆரம்ப காலத்திலே தடுத்து நிறுத்துகிறது. உடலில் பல செல்கள் பாதிப்படைந்து இருக்கும். அதனை சரி செய்யும் ஆற்றல் வேர்க்கடலையில் அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் மிகவும் அதிகமாக இரும்புச்சத்து,கால்சியம் ,ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கிறது மேலும் ஏற்கனவே இருக்கும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.

பித்தப்பை கற்கள் கரைய:

 peanuts benefits in tamil

வேர்க்கடலை நன்மைகள்: நமது உடலின் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பித்த நீரை சுரக்கும் பணியை பித்தப்பை செய்கிறது. நாம் அதிகமாக கொழுப்புச் சத்து நிறைந்த  உணவுகளை சாப்பிடும் போது சிலருக்கு பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பித்தப்பைகளில் கற்கள் ஏற்பட கூடாது என நினைப்பவர்கள் அதிகமாக வேர்க்கடலையை சாப்பிட்டு வரலாம்.

குழந்தைகளுக்கு ஏற்றது:

 verkadalai nanmaigal in tamil

verkadalai benefits in tamil: வளரும் இளம் குழந்தைகளுக்கு உணவில் அதிகமாக புரதச்சத்து, அமினோ அமிலங்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் நிலக்கடலையில் அளவுக்கு அதிகமாகவே நிறைந்துள்ளது. நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் நல்ல வலிமையுடன் இருக்கும்.

தலை முடி உதிர்வை தடுக்க:

verkadalai benefits in tamil

இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். இந்த முடி உதிர்வு பிரச்சனையானது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இது முற்றிலும் முடி உதிர்வினை தடுத்து உதிர்ந்த முடியை வளர செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–>ஆரோக்கியமும் நல்வாழ்வும்