குழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..?

baby crying bath

குழந்தை குளிக்க வைக்கும் முறை..!

குழந்தை பராமரிப்பு முறை என்பது ஒரு கலை. குழந்தைக்கு நன்றாக பேசும் வரை குழந்தை எதற்காக அழுகிறது என்று நமக்கு தெரியாது. குழந்தை பசிக்காக அழுகிறதா, தூக்கத்திற்காக அழுகிறதா என்று நாம் தெரிந்து கொள்வதற்குள் ஒரு பிரளயமே வந்தது போல் இருக்கும். அதிலும் குழந்தையை குளிக்கவைக்கும்(baby crying bath) போது தாய்மார்கள் படும் பாடு பெரும் பாடுத்தான்.

குழந்தைகள் குளிக்கும் போது அழதான் செய்வார்கள், இப்படி ஏன் அழுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் போதும். அந்த தவறுகளை இனியாவது செய்யாமல் குழந்தையை குளிப்பாட்டும்போது சந்தோஷமாக குளிப்பாட்டலாம் வாருங்கள்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?

கண்களில் தண்ணீர் பட்டுவிட்டால்:

சிலநேரங்களில் குழந்தையை குளிப்பாட்டும்போது குழந்தையின் கண்களில் தண்ணீர் சென்று விடும், இதன் காரணமாக குழந்தை கண்களை மூட தெரியாமல் அழ ஆரமித்துவிடும் (baby crying bath).

அப்போது தாங்கள் குளிக்க வைக்கும் போது ஹெட் விசர் பயன்படுத்தி கண்களை மறைத்து கொள்ளலாம். இதனால் தண்ணீர் கண்களில் படாமல் குளிக்க வைக்கலாம். இதனால் குழந்தை அழுவதை தடுத்துவிட முடியும்.

புண்களில் எரிச்சல்:

குழந்தைகளுக்கு புண்கள் அல்லது அலர்ஜி இருந்தால் அப்போது அந்த இடத்தில் தண்ணீர் அல்லது சோப்பு போடும்போது, குழந்தைகளுக்கு எரிச்சலை உண்டாக்கிவிடும்.

இதன் காரணமாக கூட குழந்தை அழுகலாம் (baby crying bath). எனவே குழந்தைகளுக்கு அலர்ஜி அல்லது புண்கள் இருந்தால், அந்த இடத்தில் சோப்பு போடுவத்தை தவிர்த்து கொள்ளுங்கள்.

குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ?

தண்ணீர் வெப்ப நிலை:

பிறந்த குழந்தைக்கு அதிக வெப்பம் மற்றும் குளிரை தாங்க முடியாது. சருமம் சென்ஸ்டிவ் ஆக இருக்கும். எனவே குளிக்கின்ற நீர் 37 டிகிரி செல்சியஸ்ல இருந்தால் போதும்.

எனவே குளிப்பாட்டும் முன் தண்ணீரின் வெப்பநிலையை கைகளில் தொட்டோ அல்லது தெர்மோமீட்டர் கொண்டோ பார்த்து கொள்ளுங்கள்.

குழந்தையை மெதுவாக தண்ணீரில் இறக்கி குளிப்பாட்டுங்கள்.

பசி:

குழந்தைக்கு அதிக பசி இருந்தாலும் குளிக்கும்போது அழுகலாம் (baby crying bath)

எனவே குழந்தை குளிப்பதற்கு முன் 35-45 நிமிடங்களுக்கு முன் குழந்தைக்கு உணவு கொடுத்த பிறகு குழந்தையை குளிப்பாட்டிவிடுங்கள்.

சோப்பு பயம்:

தங்கள் குழந்தையின் சருமத்திற்கு ஏற்ப தகுந்த சோப்பை பயன்படுத்துங்கள், குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பு கண்களில் படும் போதோ அல்லது சருமத்தில் படும் போதோ குழந்தைகளுக்கு எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் குழந்தை (baby crying bath) கண்டிப்பாக அழ ஆரமித்துவிடும்.

எனவே குழந்தை நல மருத்துவரை நாடி, குழந்தைகளுக்கான குளியல் சோப்பு மற்றும் குழந்தைகளுக்கான ஷாம்பு பயன்படுத்துங்கள்.

பெரியவர்களுக்கு பயன்படுத்தும் சோப்பை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு சருமத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

குழந்தை சோர்வாக இருந்தால்:

குழந்தைகள் சோர்வாக இருந்தால் தூங்க தான் நினைப்பார்கள். அந்த சமயங்களில் நீங்கள் குளிப்பாட்டும் போது அழத் தொடங்குவார்கள் (baby crying bath). குறிப்பாக இரவில் படுப்பதற்கு முன் குளிக்கும் சமயங்களில் இது ஏற்படும்.

எனவே படுப்பதற்கு சில மணி நேரம் முன்பாகவே குழந்தையை குளிக்க வைத்து (baby crying bath) விடுங்கள். தூங்கிற பிள்ளையை எழுப்பி குளிப்பாட்ட வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கமும் பாதிக்கப்படும்.

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

வேகமாக தண்ணீர் ஊற்றுதல்:

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது (baby crying bath) ரெம்ப கஷ்டமானது. குளிக்கும் போது அவர்களுக்கு செளகரியமாக இருந்தால் மட்டுமே அழாமல் இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு மட மடவென்று தண்ணீர் ஊற்றாமல் பஞ்சு மூலம் ஒற்றி எடுக்கலாம். மெதுவான குளிப்பாட்டல் குழந்தைக்கு செளகரியமாக இருக்கும்.

குளியலறை சௌகரியம்:

குளியலறையில் இருக்கும் வெப்பநிலை, அழுக்கு, தூசி போன்றவை குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் குழந்தை குளிப்பதற்கு (baby crying bath) அழக்கூடும்.

எனவே குளியலறை வெதுவெதுப்பான சூழலிலும், அழுக்கு தூசிகள் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும்.

குழந்தையை தூக்குவதற்கு முன் உங்கள் கைகள் வெதுவெதுப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தையை குளிக்க வைக்கும் போது (baby crying bath) பாதுகாப்பாகவும் கவனமுடனும் செயல்பட வேண்டும். மேற்கண்ட டிப்ஸ்கள் மூலம் உங்கள் குழந்தைகளை சந்தோஷமாக குளிப்பாட்டுங்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.