காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

காளான் 65

காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான.. மிகவும் அருமையான… காளான் 65 செய்வது எப்படி என்று இப்போது இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

காளான் 65 செய்ய தேவையான பொருட்கள்:-

  1. காளான் – 200 கிராம்
  2. எண்ணெய் – 1/2 லிட்டர்
  3. கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
  4. சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
  5. அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
  6. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  7. மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
  8. மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  11. உப்பு – தேவைக்கேற்ப
  12. தண்ணீர் – தேவையான அளவு
மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

காளான் 65 செய்முறை விளக்கம்..!

மஷ்ரூம் 65 செய்முறை விளக்கம் ஸ்டேப்: 1

200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.

மஷ்ரூம் 65 செய்முறை விளக்கம் ஸ்டேப்: 2

இப்போது 65 மசாலாவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

காளான் 65 செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும். அவற்றில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு, சோள மாவு 1 1/2 மேசைக்கரண்டி, அரிசி மாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

முக்கிய குறிப்பு மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

மஷ்ரூம் 65 செய்முறை விளக்கம் ஸ்டேப்: 3

15 நிமிடம் நன்றாக மசாலாவில் காளான் ஊறியதும், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள காளானை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான காளான் 65 தயார்…

சுடசுட அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்… இந்த மஷ்ரூம் 65 மழைக்காலங்களில் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான ரெசிபியாகும் (mushroom recipe)… வீட்டில் செய்து சுவையுங்கள்.

நன்றி…

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!