இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய தொக்கு இப்படி செய்து அசத்துங்கள்..!

Advertisement

வெங்காயம் தொக்கு செய்வது எப்படி? Onion Thokku recipe in tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதம் என்று அனைத்திற்கும் ஏற்ற டிஷ் தான் வெங்காய தொக்கு. இந்த வெங்காய தொகை சுவையாக மற்றும் டேஸ்ட்டியாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இந்த வெங்காய தொகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சம்பிடுவார்கள். சரி வாங்க இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து அசத்தலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – ½ கிலோ
  2. கடுகு – ஒரு டீஸ்பூன்
  3. கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
  4. வெந்தயம் – ½ ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
  6. புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு
  7. நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
  8. கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  9. கருவேப்பிலை – இரண்டு கொத்து
  10. உப்பு – தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
  12. மிளகாய் தூள் – 1½  டேபிள்ஸ்பூன்
  13. பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
வீடே மணக்கும் அளவிற்கு கிராமத்து நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி..?

வெங்காயம் தொக்கு செய்முறை – Onion Thokku recipe in tamil:Onion Thokku recipe in tamil

சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு  5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.

குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் செய்வது இவ்வளவு ஈஸியா..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement