வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த மாதிரி ரெசிபி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

Potato Cheese Balls Recipe in Tamil 

Potato Cheese Balls Recipe in Tamil 

நண்பர்களே வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை காசு கொடுத்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, சுலபமான முறையில் ஆரோக்கியமான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். வாங்க நண்பர்களே பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

மிகவும் சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..?

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் செய்வது எப்படி..?

potato cheese balls seivathu eppadi

தேவையான பொருட்கள்: 

  1. உருளைக்கிழங்கு –
  2. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  4. சோளமாவு – 4 டேபிள் ஸ்பூன்
  5. பிரட் தூள் – தேவையான அளவு
  6. மைதா – 2 டேபிள் ஸ்பூன்
  7. சீஸ் – தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் செய்முறை:

ஸ்டேப் -1  

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை வேகவைக்க வேண்டும்.

ஸ்டேப் -2 

உருளைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் அதை மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -3

பின் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சோளமாவு மற்றும் சிறிதளவு பிரட் தூள் இவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -4

பின் கிண்ணத்தில் மைதா மற்றும் சோளமாவு 2 ஸ்பூன் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும்.

ஸ்டேப் -5 

பின் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து அதன் நடு பகுதியில் சீஸ் சிறிதளவு வைத்து உருட்டி கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -6 

பின் அதை நாம் கரைத்து வைத்துள்ள மாவில் போட்டு நனைத்து எடுக்க வேண்டும். பின் அதில் பிரட் தூளை தூவி எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -7 

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொறிக்க வேண்டும். இவை பொன்னிறமாக வந்தவுடன் எடுக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் ரெடி..! நீங்களும் இந்த மாதிரி உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal