சவர்மா செய்வது எப்படி? | Shawarma Recipe in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய புத்தம் புதிய ரெசிபி எப்படி செய்து என்பதை பார்க்க போகிறோம். இப்போது ஹோட்டலுக்கு சென்றால் அங்கு அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுவது சவர்மா. குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இதனை தினமும் கடையில் வாங்கி சாப்பிட்டால் உடம்பில் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். அதனால் தான் கொரோனா காலத்தில் வீட்டில் சுவையான சவர்மா செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.
சில்லி கொத்து சப்பாத்தி |
Shawarma Eppadi Seivathu:
தேவையான பொருட்கள்:
- கேரட் – 1 கப்
- முட்டைகோஸ் –1 கப்
- குடைமிளகாய் –1
- வெங்காயம் –1
- மைதா மாவு – 200 கிராம்
- பால் – 1/2 டம்ளர்
- எண்ணெய் தேவையான அளவு
- மிளகாய் சாஸ் 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
- வினிகர் –2 ஸ்பூன்
- மிளகு தூள் 1/4 ஸ்பூன்
- சர்க்கரை – 1.1/2 ஸ்பூன்
- பூண்டு – 3
- உப்பு – தேவையான அளவு.
ஸ்டேப்: 1
- முதலில் மைதாவை எடுத்துக்கொள்ளவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும், அதனுடன் 1 ஸ்பூன் சர்க்கரை, எண்ணெய் 2 ஸ்பூன் சேர்ந்துகொள்ளவும் நன்றாக பிரட்டிக்கொள்ளவும் அதன் பின் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
- அரைமணி நேரம் பிசைந்த மாவை ஊறவைக்கவும். அதன் பின் கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதன் பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும், சிறிது நேரம் வெங்காயம் வதங்கிய பின் அதில் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்: 3
- கேரட் வதங்கிய பின் அதில் நறுக்கிய முட்டைக்கோசை சேர்க்கவும். மூன்று பொருட்களும் நன்றாக வதங்கிய பின் அதில் நறுக்கி வைத்த குடைமிளகாயை, உப்பு சேர்த்து வதக்கவும்.
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு ஏற்ற செம சைடிஷ்..! |
ஸ்டேப்: 4
- நன்கு வதங்கிய பின் அதில் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை சிறிதளவு சேர்க்கவும்.
ஸ்டேப்: 5
- அதன் பின் அதில் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 6
- அடுத்தது மிக்சியில் 3 பல் பூண்டு, அரை டம்ளர் பால், சிறிதளவு எண்ணெய், வினிகர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். நன்கு அரைத்து பின் அதில் சிறிதளவு சர்க்கரை, உப்பு, மிளகு தூள் சேர்க்கவும் மறுமுறை அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த பின் கடைசியாக எண்ணெய் சேர்த்து அதனையும் அரைக்கவும்.
ஸ்டேப்: 7
- பிறகு ஊற வைத்த மாவை சப்பாத்தி மாதிரி தேய்த்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 8
- தேய்த்து வைத்த சப்பாத்தியை எடுத்து அதன் மீது எண்ணெய் ஊற்றி நன்கு தடவி கொள்ளவும். தடவிய பின் அதனை சுருட்டி கொள்ளவும் புரோட்டா செய்யவதற்கு சுற்றி வைப்பது போல் வைக்கவும். பின்பு சுருட்டி வைத்த மாவை மறுமுறை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 9
- தேய்த்து எடுத்து வைத்த சப்பாத்தியை சிறிது என்னை ஊற்றி சப்பாத்தி போல் கொஞ்சம் நேரம் தோசைகள்லில் போட்டு வேகவைக்கவும்.
ஸ்டேப்: 10
- இப்போது பூண்டு பால் சேர்த்து மற்றும் நிறைய பொருட்கள் போட்டு அரைத்துவைத்த மாயோனிஸ் பேஸ்டை வேகவைத்து எடுத்துவைத்த சப்பாத்தி மீது தடவி கொள்ளவும்.
ஸ்டேப்: 11
- தடவி வைத்த மாயோனிஸ் மீது வதக்கி எடுத்த காய்கறிகளை வைக்கவும்.
- வைத்த பின் அதனை சுருட்டி அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் சுவையான சவர்மா ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |