தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – மாங்காய் பச்சடி, பலாப்பழ பாயாசம் மற்றும் பானகம்

Tamil Puthandu Special Recipes in Tamil

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – மாங்காய் பச்சடி, பலாப்பழ பாயாசம் மற்றும் பானகம்

பழங்காலம் முதல் இக்காலம் வரை தொன்றுதொட்டு இருக்கும் கலாச்சாரங்களில் புத்தாண்டு தினங்கள் ஒவ்வொரு முறையில் கொண்டாடப்படுகின்றன. சூரியனை அடிப்படையாக வைத்து மிக பழமையான நாகரீகம் கொண்ட தமிழர்களும் தங்களின் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். 12 மாதங்கள் கொண்ட தமிழர்களின் ஆண்டு கணக்கின் படி சித்திரை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது. தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்க மாதமான இந்த சித்திரை திருநாளில் மாங்காய் பச்சடி, பலாப்பழ பாயாசம் மற்றும் பானகம் செய்து தமிழ் புத்தாண்டை  அன்புடன் வரவேற்போம் வாருங்கள்.

இனிப்பு மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

 1. பச்சை மாங்காய் – 1
 2. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 3. வெல்லம் – 1/2 கப்
 4. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
 5. உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

 1. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 2. கடுகு – 1 டீஸ்பூன்
 3. வரமிளகாய் – 3-4
 4. பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
 5. வேப்பம்பூ – சிறிது

இனிப்பு மாங்காய் பச்சடி செய்முறை – Tamil Puthandu Special Recipes in Tamil:

முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, மாங்காய் துண்டுகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது மாங்காய் நன்கு மென்மையாக வெந்து இருக்கும். இந்நிலையில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி நன்கு வெந்துள்ள மாங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.

வேண்டுமானால் இத்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, மாங்காயுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து 10 நொடிகள் வதக்கி விடுங்கள்.

இறுதியாக தாளித்ததை மாங்காய் பச்சடியில் சேர்த்து கிளறினால், மாங்காய் பச்சடி தயார்.தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – பலாப்பழ பாயாசம் செய்முறை:

தேவையான பொருட்கள்:

 1. அரிசி – 1 கப்,
 2. பாசிப் பருப்பு – அரை கப் (பொன்னிறமாக வறுக்கவும்)
 3. வெல்லம் – 2 கப்,
 4. தேங்காய் – 1, துருவி, கெட்டி பால் எடுக்கவும். பலாப்பழம் – 10 சுளை எடுத்து, பொடிப் பொடியாக நறுக்கவும்.
 5. நெய், ஏலக்காய் – தேவைக்கேற்ப.
 6. சுக்குப் பொடி – அரை தேக்கரண்டி.

பலாப்பழ பாயாசம் செய்முறை – Tamil Puthandu Special Recipes in Tamil:

குக்கரில் அரிசி, பாசிப் பருப்பு, பொடியாக நறுக்கிய பலாப்பழம் போன்றவைகளை ஒன்றாக போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அடுத்ததாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இதில், வேக வைத்துள்ளதை சேர்த்து கிளறவும்.

ஒரு கொதி வந்ததும், அடுப்பை, ‘சிம்’மில் வைத்து கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். அத்துடன் நெய், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
பலாப்பழ பாயசம் ரெடிதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு,
 2. மாங்காய் துண்டுகள் – 2,
 3. வெல்லம் – 5 கிராம்,
 4. பச்சை மிளகாய் சிறியது – 1,
 5. கடுகு – அரை தேக்கரண்டி, எண்ணெய் – 1 தேக்கரண்டி,
 6. உப்பு – தேவையான அளவு.

வேப்பம்பூ பச்சடி செய்முறை – Tamil Puthandu Special Recipes in Tamil:

மாங்காய் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும்.

வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்து விடவும்.

பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

‘வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது..’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று, முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – பானகம் செய்முறை:

தேவையான பொருட்கள்:

 1. வெல்லம் – கால் கிலோ,
 2. தண்ணீர் – 3 கப்,
 3. ஏலக்காய் – கால் தேக்கரண்டி,
 4. சுக்குத் துாள் – 1 சிட்டிகை,
 5. எலுமிச்சம்பழம் – 2,
 6. பச்சைக்கற்பூரம் – சிறிதளவு.

பானகம் செய்முறை – Tamil Puthandu Special Recipes in Tamil:

வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டவும். ஏலக்காய்த்துாள், சுக்குத்துாள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலக்கவும். எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்