திரும்ப திரும்ப கேட்பாங்க, இந்த அருமையான தந்தூரி டீ போட்டால்..!

tandoori chai

டீ கடை ஸ்டைல் தந்தூரி டீ போடலாம் வாங்க..! Tandoori Chai Recipe in Tamil..!

Tandoori Chai Recipe in Tamil: வணக்கம் இன்னக்கி நாம் சுவையான தந்தூரி டீ (tandoori chai) நம்ம வீட்டிலேயே ஈஸியா எப்படி போடலாம் என்று பார்ப்போம். இந்த தந்தூரி டீ அனைத்து டீ பிரியர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த தந்தூரி டீ (tandoori chai) அதிக சுவையுடன் இருக்கும், இந்த தந்தூரி டீ குடித்தால் திரும்ப, திரும்ப அருந்த வேண்டும் என்று எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த தந்தூரி சாய் (tandoori chai) வீடே மணக்கும்.

சரி வாங்க இந்த அருமையான தந்தூரி டீ எப்படி நம் வீட்டில் எளிமையான முறையில் போடலாம் என்று பார்க்கலாம்.

ஆயுள் இரட்டிப்பாகுமாம் இந்த ஆவாரம் பூ டீ குடித்தால் – அதன் செய்முறை..!

தந்தூரி டீ (Tandoori Chai) போட தேவைப்படும் பொருட்கள்:

  1. பால் – இரண்டு கப்
  2. டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
  3. சர்க்கரை – நான்கு ஸ்பூன்
  4. இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  5. ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
  6. சிறிய மண் கலயம் – ஒன்று

தந்தூரி டீ செய்முறை (Tandoori Chai):

Tandoori Chai Recipe in Tamil step:1

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

அதன்பிறகு இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பின்பு நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

Tandoori Chai Recipe in Tamil step: 2

இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுப்பை இப்போது மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

Tandoori Chai Recipe in Tamil step: 3

இப்போது நாம் மண் கலயத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதாவது மண் பானையை 20 நிமிடங்கள் வரை நல்ல அடுப்பை வேகமாக எரியவைத்து பானையை சூடு படுத்தி வைத்து கொள்ளவும்.

Tandoori Chai Recipe in Tamil step: 4

பின்பு தந்தூரி டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும்.

அவ்வளவுதான் தந்தூரி டீ தயார். சிறிது நேரம் கழித்த பிறகு இந்த டீயை வேறொரு பாத்திரத்தை மாற்றி கொள்ளுங்கள்.

இந்த சுவையான தந்தூரி டீ அருந்துங்கள்.

முக்கிய குறிப்பு:

சூடுபடுத்திய பானையில் டீயை ஊற்றும்போது அடி பகுதியில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ளுங்கள் இந்த படத்தில் காட்டியது போல.

தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil