வானிலை செய்திகள் தமிழ்நாடு | Vaanilai Seithigal
Vaanilai Arikkai in Tamil Today 2024 / இன்றைய வானிலை: தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் மக்களை மகிழ்ச்சி நிலையில் வைத்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் மழை காலம் வந்து விட்டாலே இன்று எந்த மாவட்டத்தில் அதிக மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள செய்தியை தினம்தோறும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வெளியில் பணிக்கு செல்லும் நபர்களுக்கு வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் வானிலை செய்திகளை தெரிந்துக்கொள்ள நேரம் இருக்காது. அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் வானிலை செய்திகளை (vaanilai seithigal) பற்றி அப்டேட் செய்கிறோம். இந்த பதிவானது அனைவருக்கும் மிக பயனுள்ள பதிவே.. அனைவரும் படித்து பயன் அடையுங்கள்..!
சென்னையில் மின்தடை |
வானிலை செய்திகள் தமிழ்நாடு:
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை நிலவரம் (09.01.2024):
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும், இந்தியப்பெருங்கடலின் கிழக்கே இலங்கைக்கு தெற்கு பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, 09.01.2024 (இன்று): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளைய வானிலை அறிக்கை:
10.01.2024 (நாளை): தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
11.01.2024 மற்றும் 12.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை அறிக்கை சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சதீவு பகுதிகளை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும்வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.01.2024: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |