அட்சய திருதியை என்றால் என்ன? | What is Akshaya Tritiya in Tamil

What is Akshaya Tritiya in Tamil

அட்சய திருதியை | Akshaya Tritiya in Tamil 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை. இந்த நாள் ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்துள்ளது என்ற கேள்விக்கான விடை பலருக்கும் தெரிவதில்லை. நாம் இந்த பதிவில் அட்சய திருதியை என்றால் என்ன மற்றும் அதன் சிறப்புகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அட்சய திருதியை

அட்சய திருதியை 2022:

 • அட்சய திருதியை மே மாதம் செவ்வாய்கிழமை 3-ம் தேதி வருகிறது.

Akshaya Tritiya in Tamil:

 • அட்சய திருதியை என்பது இந்துக்கள் மற்றும் சமணர்கள் வழிபடும் புனித நாள் ஆகும்.
 • கிருதயுகத்தில் பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்ட நாள் தான் அட்சய திருதியை.
 • சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை நாம் அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.
 • எல்லா நலன்கள் மற்றும் வளங்கள் குறைவில்லாமல் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 • அட்சய என்றால் வளர்க என்று பொருள், அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும் என்று கூறுவார்கள்.
 • சுக்கிரன் ஆசி தரும் நாளான வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருவது மிகவும் சிறப்பானது.
அட்சய திருதியை 2022 எப்போது ?

தானம்:

 • Akshaya Tritiya Endral Enna: இந்த நாளில் இறைவழிபாடு மேற்கொள்வது நல்லது. அட்சய திருதியை அன்று பொருள் வாங்குவதை விட மற்றவர்களுக்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு தானம் செய்வது தான்.
 • குடை, விசிறி, குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான எழுதுகோல், இந்த கோடை காலத்தில் மற்றவர்களுக்கு தண்ணீர் பாத்திரம் கொடுக்கலாம். அரிசி, உணவு பொருட்கள், உடை, பசு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.
 • மற்றவர்களுக்கு தானம் மட்டுமல்ல ஏதாவது ஒரு நல்ல காரியத்தையும் நீங்கள் இந்த தினத்தில் செய்யலாம். வாகனம் வாங்குவது, முக்கிய முடிவுகள் போன்றவற்றையும் செய்யலாம்.
 • ஏழைகளுக்கு தயிர் சாதம் வழங்கினால் உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு குறைவில்லா அன்னம் கிடைக்கும்.
 • ஏழை எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யும் தானம் பல புண்ணியங்களை கொடுக்கும்.
 • தானம் செய்வதை நீங்கள் அட்சய திருதியை அன்று மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை மற்ற நாட்களில் செய்தாலும் அது உங்களுக்கு புண்ணியம் தான்.

வாங்க வேண்டிய பொருள்:

 • பல மக்களிடம் அட்சய திரிதியை அன்று நகை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற மன நிலை உள்ளது.
 • இந்த தினத்தில் நீங்கள் அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல்லது தான். இதை செய்வதன் மூலமும் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கடவுளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil