Bajra Meaning in Tamil | கம்பு பற்றிய தகவல்..!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரிந்த கம்பு பற்றிய சில தகவல்களை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக சிறுதானிய வகைகளிலேயே அதிக சத்துக்களை கொண்டது என்றால் அது கம்பு தான். நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கணிசமான அளவிற்கு கம்பு கொண்டுள்ளது.
இவ்வளவு நன்மைகளையும் கொண்டுள்ள கம்பின் வரலாறு, பிறப்பிடம் போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா. அவற்றையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Bajira in Tamil:
Bajira என்பதன் பொருள் கம்பு ஆகும். கம்பு என்பது ஒரு சிறுதானிய வகையைச் சிறந்த ஒரு தானியம் ஆகும். அதிகமாக பயிரிடப்படும் சிறுதானிய வகைகளை கம்பு முதலிடத்தை பிடிக்கின்றது. இது ஒரு புன்செய் நிலபயிராகும்.
பொதுவாக கம்பு நீர்ப்பாசனம் அதிகம் உள்ள நிலத்தில் மற்றும் நீர்ப்பாசனம் அதிகம் இல்லாமல் வறண்ட நிலத்திலும் மானாவாரியாக அதிக அளவில் விளைவிக்கப்பட்டுகிறது. அதே போல் கம்பு எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடியது.
கம்பு இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதன் விளைச்சல் காலம் என்று பார்த்தால் 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.
கம்பின் பிறப்பிடம்:
கம்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆனால் கம்பு இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைவிக்கப்பட்டு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலகில் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்துள்ளது.
கம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
சிறுதானிய வகையிலேயே கம்பு தான் அதிக அளவில் 11.8% புரோட்டீன் சத்து கொண்டுள்ளது. ஆரோக்கியமான தோல் மற்றும் கண்பார்வைக்கு முக்கிய சத்தாக பங்கு வகிக்கின்ற வைட்டமின் A கம்பில் அதிகம் நிறைந்துள்ளது.
குறிப்பாக 100 கிராம் கம்பில்,
- 42 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.
- 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
- B11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
- ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
- நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
- வேறு எந்தத் சிறுதானியத்திலும் இல்லாத அளவு 5% எண்ணெய் உள்ளது.
கம்பில் என்ன உணவு செய்யலாம்:
- கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
- கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.
- கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.
கம்பின் மருத்துவ பயன்கள்:
- கம்பு உடல் உஷ்ணமடைவதை குறைக்கிறது.
- கம்பு வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகின்றது.
இதையும் படியுங்கள் => கம்பு சாகுபடி முறைகள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |